அதிமுக தோல்வி: திண்டிவனம் புதுக் கதை!
சென்னை:
தமிழக ஜனநாயக காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காததால்தான் அதிமுகதோல்வியைத் தழுவியது என்று திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
காங்கிரஸிலிருந்து அதிரடியாக வெளியேறி, அதே வேகத்தில் புதிய கட்சியைத்தொடங்கி, ஜெயலலிதாவோடு வேகமாக நட்பாகி, ஆனால் யாரும் எதிர்பாராதவகையில், ஒரு சீட் கூட தரப்படாமல் அதிமுக கூட்டணியிலிருந்துவெளியேற்றப்பட்டவர் திண்டிவனம் ராமமூர்த்தி.தமிழக ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக சொற்பதொண்டர்களோடு வலம் வந்து கொண்டிருக்கும் திண்டிவனம், தனது கட்சியின்கூட்டத்தை சென்னையில் கூட்டி எதிர்காலம் குறித்து ஆலோசித்தார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒட்டுமொத்தமாக மற்றகட்சிகளை விட அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இருப்பினும்தொகுதி அளவில் அதிக வாக்குகள் கிடைக்காததால்தான் அதிமுக தோற்றது.எங்களுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.
எங்களுடன் சேராத காரணத்தால்தான் தோல்வியைத் தழுவியது.
தஞ்சை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் எங்களதுகட்சியின் ஆதரவு கிடைக்காத காரணத்தால்தான் அதிமுக தோல்வியைத் தழுவியது.
தளி தொகுதியில் எங்களது ஆதரவு கிடைத்ததால்தான் அங்கு போட்டியிட்டகம்யூனிஸ்ட் கட்சியின் அதிருப்தி வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற முடிந்தது.
நடிகர் விஜயகாந்த் துணிச்சலாக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதை நாங்கள்பாராட்டுகிறோம். நாங்களும் இப்படித் தனித்துப் போட்டியிட்டு, செலவுசெய்திருந்தால் எங்களுக்கும் இப்படிப்பட்ட வெற்றி கிடைத்திருக்கும், 6 சதவீதத்திகும்மேலாக வாக்குகளைப் பெற்றிருப்போம்.
எங்களை யார் மதிக்கிறார்களோ அவர்களுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிவைப்போம். எங்களது கட்சி தொடர்ந்து செயல்படும். அதற்கு வசதியாக சிலகட்சிகளுடன் பேசி வருகிறோம். ஒரு முக்கியமான தேசியக் கட்சியுனுடம் பேசிவருகிறோம். விரைவில் அதன் விவரங்களை வெளியிடுவோம்.
காங்கிரஸ் கட்சி தேய் பிறையாகி விட்டது. தேயத் தொடங்கியுள்ளது. பெரும்பான்மைமக்களின் ஆதரவைப் பெறாத ஒரு கட்சி இங்கு ஆட்சி நடத்துகிறது. அதில் பங்குகேட்டு தீர்மானம் போட்ட காங்கிரஸ் கட்சி இப்போது வாய் மூடி மவுனமாக உள்ளதுஎன்றார் திண்டிவனம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications