மேட்டூர் அணை நாளை திறப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் அணையிலிருந்து நாளை மாலை காவிரிப் பாசனப் பகுதி விவசாயப்பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரிப் பாசன விவசாயத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் மழை இல்லாதது,கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களினால் கடந்த நான்குஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படவில்லை.

இதனால் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு,விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தற்போது அணையில்போதிய நீர் இருப்பு உள்ளதால் குறித்த காலத்தில் அணை திறக்கப்படும் என முதல்வர்கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை மாலை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அணையில் தற்போது 115.05 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 5000கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், குறுவை சாகுபடியை சிறப்பாக செய்யமுடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கானகூட்டுறவுக் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. புதிய கடன் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி காவல்வாய்களைத் தூர் வாரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.தற்போது அணையும் திறந்து விடப்படவுள்ளதால் காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நாளை மாலை 6 மணிக்குஅணையைத் திறந்து விடுகிறார். முதலில் விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்துவிடப்படும். அதன் பின்னர் படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் காவிரிப் பாசனப்பகுதிகளில் உள்ள 16 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+