சாப்ட்வேர் நிறுவனங்களின் குறையை தீர்க்க புதிய அமைப்பு: தமிழக அரசுக்கு தயாநிதி கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கதகவல் தொழில்நுட்ப குறை தீர்ப்பு அமைப்பை தமிழக அரசு அமைக்க வேண்டும்என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நெட்வோர்க் துறையில் உலகப் புகழ்பெற்ற டெல்கோர்டியாநிறுவனம் தனது ஆர் அண்ட் டி மையத்தை சென்னையில் திறந்துள்ளது.இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு தயாநிதி மாறன் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறைகள், பிரச்சினைகளைகேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண தமிழக அரசு புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டும். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் பேசியுள்ளேன். நல்லமுடிவாக அவர் எடுப்பார் என்று நம்புகிறேன்.
புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தொழிற் கொள்கையை தமிழக அரசுஅறிவிக்கும்போது, தகவல் தொழில்நுட்ப குறை தீர்ப்பு அமைப்பு தொடர்பானஅறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன்.
இந்த குறை தீர்ப்பு அமைப்பின் மூலம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்திக்கும்பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் தவிர, புதிதாக தமிழகத்தில் கால் பதிக்க விரும்பும்நிறுவனங்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்.
பெங்களூரிடமிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.அதேசமயம் அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வதை விட வரும்முன் காப்பதே சிறந்தது.
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பதவியேற்று சில வாரங்களே ஆகியுள்ளது.இருப்பினும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே டெல்கோர்டியா, மோட்டோரோலாஆகிய பிரபல நிறுவனங்களை ஈர்க்க முடிந்துள்ளது பெரும் சாதனையாகும்.
இரு நிறுவனங்களும் அமெரிக்காவைச் சேர்ந்தவை என்பதில் நான் மிகவும்மகிழ்ச்சியாக உள்ளேன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நான் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகபதவியேற்றபோது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மாற்று இடமாகதமிழகத்தை கொண்டு வர முயற்சித்தேன். ஆனால் அதிமுக அரசு போட்டதடைகளால் அதை என்னால் செய்ய முடியவில்லை.
அமைச்சர் பதவியில் இருந்தும் அதைச் செய்ய முடியாததற்காக என்னையே நான்நொந்து கொண்டதும் உண்டு.
தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொழில்நுட்பம்சார்ந்த துறை ஆகியவற்றின் மையமாக இப்போது தமிழகம் விளங்குகிறது.ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, நோக்கியா, சோனி எரிக்சன்என புகழ் பெற்ற நிறுவனங்கள் இங்கே இருப்பது சந்தோஷம் தருகிறது என்றார்தயாநிதி மாறன்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாறன் பேசுகையில், மத்திய கைலாஷ் முதல் சிறுசேரிவரையிலான தகவல் தொழில்நுட்ப சாலைத் திட்டம் 3 பகுதிகளாகதிட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய கைலாஷ் முதல் டைடல் பூங்கா வரையிலான முதல் பகுதி ஆகஸ்ட் மாதத்தில்முடிவடையும். இதுதொடர்பான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆகஸ்ட்மாதம் இந்தப் பகுதி வரை போக்குவரத்திற்குத் திறந்து விடப்படும்.
பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பழைய மகாபலிபுரம்சாலையை மேம்படுத்தி, அதி நவீன தகவல் தொழில்நுட்ப காரிடாராக மாற்றும்நோக்கத்துடன்தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி சரிவர திட்டமிடாததால் இந்த பணிகள்தாமதமடைந்தன.
கடந்த மாதம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு,உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சீரிய முறையில்திட்டமிடப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவல் தொழில்நுட்ப சாலையை மகாபலிபுரம் வரை நீடிக்க வேண்டும் எனநான் ஆலோசனை கூறியுள்ளேன். முதல் கட்டமாக சிறுசேரி வரை இத்திட்டம்முடிக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திட்டம் முழுமையாக முடிவடையும்.
சாலை தொடங்கும் மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம்இருப்பதால், அங்கு மேம்பாலம் கட்டலாம் என யோசனை தெரிவித்துள்ளேன். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மடியும் என்றார் தயாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications