தண்ணீர் இல்லாமல் பாதியில் நின்ற ஊட்டி ரயில்
ஊட்டி:
ஊட்டிக்குச் சென்ற மலை ரயில், தண்ணீர் இல்லாததால், பாதியிலேயே நின்று விட்டது.இதனால் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மலைகளின் ராணியான ஊட்டிக்கு, மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி மலை ரயில்(நீலகிரி பாசஞ்சர்) இயக்கப்படுகிறது.யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய சின்னமாக இந்த ரயில்அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஊட்டியில் சீசன் என்பதால் அங்கு பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.இந் நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குக் கிளம்பிய மலைரயிலில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ரயில் கல்லார் ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நின்றுவிட்டது. இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ரயிலில் போதிய தண்ணீர்இல்லாததால், தொடர்ந்து ரயில் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.நீராவியினால்தான் இந்த ரயில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதி வழியிலேயே தவித்தனர். பின்னர் அனைவரும்கல்லார் ரயில் நிலையம் வரை தண்டவாளத்திலேயே நடந்து சென்று அங்கிருந்துபஸ்கள் மூலம் ஊட்டிக்குச் சென்றனர்.
தரமற்ற நிலக்கரி?
இந்த ரயில் அடிக்கடி பழுதாகிவிடுவது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டமேலாளரிடம் கேட்டபோது,
இப்போது மலை ரயிலுக்கான என்ஜினில் பயன்படுத்தப்படும் நிலக்கரி தரமற்றதாகஉள்ளதாக புகார்கள் வருகின்றன. இதனால் அந்த நிலக்கரி சப்ளை தாற்காலிகமாகநிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications