மேட்டூர் திறப்பு: காவிரி டெல்டாவில் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
காவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி விவசாயிகளின் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர்அணை திறந்து விடப்படும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறுகாரணங்களினால் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்க முடியவில்லை.இதனால் காவிரி விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள்.
இந்த ஆண்டு அணையில் போதிய அளவு நீர் இருப்பதால் குறிப்பிட்ட காலத்தில்அணை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அணையைத் திறந்து விட்டார்.
தொடகத்தில் விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுபடிப்படியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications