போலீஸ் எல்லைச் சண்டை: பறிபோன உயிர்!
சென்னை:
காவல் நிலைய எல்லைப் பிரச்சினையில் 40 வயது நபரின் உயிர் பரிதாபமாகபறிபோனது.
சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலை பாலம் அருகே 40 வயது மதிக்கத்தக்கஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து கீழேவிழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வழிந்தது.இதையடுத்து ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.உடனடியாக விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை மீட்டு அருகில் உள்ளராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பாமல், அந்த நபர் விழுந்து கிடந்தஇடம் எங்களது காவல் நிலைய எல்லைக்குள் வரவில்லை, அண்ணா சாலை காவல்நிலையத்தினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து திரும்பிச்சென்று விட்டனர்.
தலையில் அடிபட்டுக் கிடந்த அந்த பரிதாபத்துக்குரிய நபர் 3 மணி நேரமாக ரத்தவெள்ளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் பின்னர்அண்ணா சாலை காவலர்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார்.
பின்னர் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அண்ணா சாலைகாவலர்கள் கொண்டு சென்றனர். ராயப்பேட்டை போலீஸாரின் அலட்சியம்காரணமாக உயிர் பிழைத்திருக்க வேண்டிய அந்த நபர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அண்ணா சாலை போலீஸார் கூறுகையில், காயமடைந்து கிடந்த நபரைமுதலில் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ராயப்பேட்டை போலீஸார் அனுப்பியிருக்கவேண்டும். அதை விடுத்து அவர்கள் அந்த நபரை பிளாட்பாரத்தில் இழுத்துப் போட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்று கூறினர்.
ராயப்பேட்டை போலீஸார் இதுகுறித்துக் கூறுகையில், அந்த நபர் எங்களது காவல்நிலைய எல்லைக்குள் விழுந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்போம் என்றுமனிதாபிமானமே இல்லாமல் தெரிவித்தனர்.
போலீஸாரின் அலட்சியத்தால் ஒரு உயிர் தேவையில்லாமல் பறிபோனது அப்பகுதிமக்களிடையே விரக்தியையும், போலீஸார் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
மயங்கி விழுந்து இறந்த அந்த நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அண்ணாசாலை போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications