பஸ்-கார் மோதலில் 6 பேர் பலி
பாண்டிச்சேரி:
பஸ்சும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே இச் சம்பவம் நடந்தது.
பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் வீரப்பன் (40), தனது மனைவி சுமதி (31), மகள்சண்முகப்பிரியா (8), மாமியார் கலைவாணி ஆகியோருடன் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலுக்கு சாமிகும்பிட சென்றனர்.இவர்களுடன் கடலூரில் உள்ள இவரது உறவினர் ஆனந்த பாஸ்கரனும் (40) அவருடைய மகன்பாலசுப்பிரமணியனும் (4) பக்கத்து வீட்டுக்காரர் சுவாமிநாதனும் (30) உடன் சென்றனர்.
கடலூரில் இருந்து மாருதி வேன் மூலம் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பின்னர் அங்கிருந்துதிருநாகேஸ்வரம் கோவிலுக்கு மயிலாடுதுறை வழியாக சென்றனர். அப்போது வேன் திருவிடைமருதூர் அருகேஉள்ள திருப்பனிப்பேட்டை பத்திரகாளியம்மன் கோவில் அருகே வந்த போது எதிரே கும்பகோணத்தில் இருந்துசிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆனந்த பாஸ்கரன், சாமிநாதன், டிரைவர் சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த வீரப்பன், கலைவாணி, சுமதி, பாலசுப்பிரமணியன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய 5பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே வீரப்பன் இறந்தார். மற்ற 4 பேருக்கும் கும்பகோணத்தில் முதல் உதவி சிகிச்சைஅளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைபலன் இன்றி சிறுமி சண்முகப்பிரியா, சிறுவன் பால சுப்பிரமணியன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன்-லாரி மோதலில் 3 பேர் பலி:
இதற்கிடையே அச்சரப்பாக்கம் அருகே லாரியும், வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த 3 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுப்பட்டுள்ளனர்.
கந்தர்வகோட்டையில் இருந்து சென்னைக்கு உறவினர்கள் திருமணத்திற்காக இவர்கள் வேனில் சென்ற போதுஇந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தினால் சென்னை, திருச்சிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications