சென்னை நகை வியாபாரி சேலத்தில் கடத்தல்: ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் சேலத்தில் கடத்திச் செல்லப்பட்டார்.
அவரை மீட்க போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 6 கடத்தல்காரர்கள்பிடிபட்டுள்ளனர். வியாபாரி இன்னும் மீட்கப்படவில்லை.கடந்த திங்களன்று சேலத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பிய அந்த நகை வியாபாரி வீடு திரும்பவில்லை.
அவரது வீட்டினர் செல்போனை தொடர்பு கொண்டபோது, அவருக்குப் பதிலாக வேறு சிலர் பேசினர்.
வியாபாரியை தாங்கள் கடத்தி வந்துவிட்டதாகவும், அவரை விடுவிக்க ரூ. 1 கோடி தர வேண்டும் என்றும் அந்தக்கும்பல் கூறியது. இதையடுத்து வியாபாரியின் மகனும் உறவினர்கள் சிலரும் சேலம் சென்று அந்தக் கும்பலைசெல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
அப்போது பணம் தந்தால் மட்டுமே விடுவிப்போம் என அந்தக் கும்பல் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டதால்,சென்னை போலீசிடம் புகார் தந்தது வியாபாரியின் குடும்பம்.
இதையடுத்து சேலம் போலீஸ் கமிஷ்னர் கோபால கிருஷ்ணனை அலெர்ட் செய்தது சென்னை போலீஸ். அவர்தனது தலைமையில் தனிப் படை அமைத்து ரகசிய விசாரணையில் இறங்கினார்.
வியாபாரியின் குடும்பத்தினரை கடத்தல் கும்பலுடன் பேச வைத்த போலீசார், பணம் தருவதாகவும், எங்கு வரவேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இதையடுத்து சேலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு வருமாறுகடத்தல்காரர்கள் கூறினர்.
அவர்கள் கூறியபடி நேற்றிரவு சேலத்தில் கும்பல் சொன்ன இடத்துக்கு மப்டியில் சென்றனர் போலீசார். அந்தக்கும்பல் கோரியபடி பணம் நிரப்பப்பட்ட பையுடன் போலீசார் சென்றனர்.
மப்டியில் வந்த போலீசாரை கடத்தப்பட்டவரின் உறவினர்கள் என எண்ணி நெருங்கிய கடத்தல் கும்பலை அந்தபோலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால், அதில் 2 பேர் மட்டுமே மாட்டிக் கொள்ள மற்றவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.
அவர்களை ஸ்டேசனுக்குக் கொண்டு சென்று போலீசார் அடித்து, துவைத்து எடுத்ததில் கடத்தல் கும்பல் குறித்தமுழு விவரமும் வெளியில் வந்தது. இவர்கள் தந்த தகவலின்பேரில் மேலும் 4 கடத்தல்காரர்களை போலீசார்இன்று அதிகாலை கைது செய்தனர்.
ஆனால், தங்களது சகாக்கள் போலீசிடம் சிக்கிவிட்டதையடுத்து வியாபாரியை அந்தக் கும்பல் வேறு இடத்துக்கொண்டு சென்றுவிட்டது. இதனால் அவரை இதுவரை மீட்க முடியவில்லை.
ஆனால், கடத்திய நபர்கள் குறித்த முழு விவரமும் போலீசாருக்குக் கிடைத்துவிட்டதால், அவர் நிச்சயமாகமீட்கப்பட்டுவிடுவார் என போலீசார் உறுதியாகக் கூறுகின்றனர்.
வியாபாரியை கோவை அல்லது திருச்சிக்கு அந்தக் கும்பல் கொண்டு செல்ல வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்துள்ளதால் சேலத்தில் இருந்து செல்லும் அனைத்து முக்கிய சாலைகளிலும் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரது பெயர் விவரத்தையும், கைது செய்யப்பட்ட 6கடத்தல்காரர்களின் விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications