ராதாரவி ஆதரவு இருந்தால்...
சென்னை:
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று நடிகர் நாசர்கூறியுள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ளது. இத் தேர்தலில்யார் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவது என்ற எதிர்பார்ப்பு நடிகர், நடிகையர்மத்தியில் எழுந்துள்ளது.முதலில் தலைவர் பதவிக்குப் போட்டிட மாட்டேன் என்று கூறி வந்த தற்போதையதலைவர் விஜயகாந்த், இப்போது அனைவரும் வற்புறுத்தினால் மீண்டும்போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.
சங்கத் தேர்தல் தொடர்பாக விவாதிக்க கூடிய பேரவைக் கூட்டத்தில் நடிகர் நாசர்,மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் விஜயகாந்த்துடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். அரசியல் பின்னணி கொண்டவர்கள் தலைவராக இருக்கக் கூடாது பிறபதவிகளுக்கும் வரக் கூடாது என்று நாசர் கூறியுள்ளார்.
பேரவைக் கூட்டத்தில் நடிகர்களுக்கு போதிய அளவில பேச வாய்ப்புஅளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாசரின் இந்த பேச்சால் சங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நாசருக்கு ஆதரவாக மன்சூர் அலிகான், மூத்த உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்டபலரும் குரல் கொடுத்துள்ளனர். விஜயகாந்த் மீண்டும் போட்டியிட்டால் நாசரைநிறுத்துவோம் என்று நல்லதம்பி கூறியுள்ளார்.
ஆனால் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லைஎன்று நாசர் தெளிவுபடுத்தியுள்ளார். காரைக்குடியில் எம்டன் மகன் படப்பிடிப்பில்இருந்த நாசர் இதுகுறித்துக் கூறுகையில், தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்குஇல்லை. நான் நிச்சயம் போட்டியிட மாட்டேன் என்றார் நாசர்.
இதற்கிடையே தற்போதைய நிர்வாகிகளையே மீண்டும் தேர்ந்தெடுத்து விடலாமாஎன்பது குறித்து வருகிற 17, 18 ஆகிய நாட்களில் முக்கிய ஆலோசனைநடைபெறவுள்ளது. இந்த முடிவுக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால், சரத்குமாரைதலைவர் பதவிக்கு நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ராதாரவியின் ஆதரவு இருப்பவர்தான் தலைவர் பதவிக்கு வரமுடியும் என்ற நிலை உள்ளது. விஜயகாந்த், சரத்குமார் இருவரையும் ராதாரவிஆதரிக்கிறார். எனவே இவர்களில் ஒருவரே தலைவர் பதவிக்கு வருவார்கள் எனகூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications