சிக்குன் குனியா காய்ச்சல்-கிரமாமே காலியானது
சென்னை:
சிக்குன் குனியா காய்ச்சலால் பழவேற்காடு அருகில் உள்ள தோணிறவு குப்பம் என்ற கிராமமே காலியாகிவிட்டது.ஊரை விட்டு அனைவருமே ஓடிவிட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சிக்குன் குனியா என்னும் புதிய விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சேலம்,திருவள்ளூர் மாவட்டங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 11,000 பேர்இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இந் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம்அதிகமாக உள்ளது.
இங்குள்ள தோணிறவு குப்பம் கிராமத்தில் அனைத்து குடும்பத்திலும் நோய் தாக்கியுள்ளது.
இந்த கிராமத்தில் மொத்த மக்கள் தொகை 642. இதில் 118 பேருக்கு இந்த விஷ காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு என காய்ச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். சிலவீடுகளில் ஒட்டு மொத்த உறுப்பினர்களுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தக் காய்ச்சலால் 5 வயது சிறுமியான மாலதி என்பவர் இறந்து விட்டார். இதானல் பீதி அடைந்த கிராம மக்கள்ஊரை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சில வயதான ஆண்கள் மட்டும் ஊரில் இருக்கிறார்கள். அவர்களும்வீட்டில் இல்லாமல் கோவிலில் தாங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், நோய் பரவாமல் தடுக்கவும், சென்னை, பொன்னேரியில்இருந்து டாக்டர்கள் குழு அங்கு அனுப்பட்டது. ஆனால் ஊரே காலியாகி விட்டதால் அவர்களிடம் சிகிச்சைக்குவரக்கூட ஆட்கள் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் பொன்னேரி, பழவேற்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில்21 பேர்களின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ரன்வீர் பிரசாத் பார்வையிட்டார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் சேகரிக்கப்பட்டு சென்னை கிங் இன்ஸ்டியூட் ஆய்வு கூட்டத்துக்குஅனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகு நோய் பற்றிய முழு விவரமும் தெரியவரும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications