வருமான வரி வழக்கு: ஜெ, சசி மனுக்கள் தள்ளுபடி!
சென்னை:
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாததை எதிர்த்து தொடரப்பட்டவழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல்செய்த மனுக்களை சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றம்தள்ளுபடி செய்தது.
கடந்த 1991-92ம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும்,சசிசகலாவும் தாக்கல் செய்யவில்லை என்று கூறி இருவர் மீதும் சென்னை எழும்பூர்பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு போட்டது.இந்த வழக்கில் விசாரணை தாமதமடைந்து வந்தது. மேலும் குற்றச்சாட்டுக்களும் பதிவுசெய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றத்திற்குஉத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறைமனு செய்தது. ஆனால் இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை வருமான வரித்துறை அணுகியது. இந்த மனுவைவிசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா தொடர்பாக நிலுவையில் உள்ளவருமான வரிக்கணக்கு தொடர்பான 4 வழக்குகளையும் நான்கு மாதங்களுக்குள்விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்தாக்கல் செய்த மனுக்கள் மீதும், குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வது தொடர்பானமனு மீதும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதம் நடத்தினர். வாதம் முடிந்த நிலையில்நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜு, நான்கு வழக்குகளிலிருந்தும்தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா தாக்கல் செய்த மனுக்களைதள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், வழக்கில் உள்ள சாட்சிகளையும், ஆவணங்களையும்பார்க்கும்போது ஜெயலலிதா, சசிகலா மீது வருமான வரி வழக்கு தொடர்வதற்குபோதுமான காரணம் உள்ளது, ஆதாரங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு எதிராகவழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான காந்திரங்கள் உள்ளன.
இருவரும் வேண்டும் என்றே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல்உள்ளனர். இவ்வழக்கில் இதுவரை உண்மை நிலை கண்டயறிடப்படவில்லை. வழக்குவிசாரணையின்போது தங்களை நிரபராதிகள் என்று நிரூபிக்க அவர்களுக்கு போதியவாய்ப்புகள் தரப்படும்.
அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றார் நீதிபதி.வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
மேலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும், மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய ஜூலை 5ம் தேதி வரை நீதிபதி அனுமதித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications