இ.கம்யூ. எம்.பிக்கள் கட்டி உருண்டு சண்டை!

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்:

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தென்காசி எம்.பி.யும், கோவை எம்.பியும் கட்டிப் புரண்டு சண்டைபோட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் குற்றாலத்தில் 2நாட்களுக்கு நடைபெறுகிறது. நேற்று காலை திருவிதாங்கூர் அரண்மனைபங்களாவில் இக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு தென்காசி எம்.பி. அப்பாத்துரைதலைமை தாங்கினார்.

மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசியச் செயலாளர் டி.ராஜா, மத்திய குழுஉறுப்பினர் நல்லகண்ணு, கோவை எம்.பி. சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் இரவு பத்து மணிவரை நீண்டது. பொதுவான பல்வேறு பிரச்சினைகள் குறித்துவிவாதிக்கப்பட்டு வந்த நிலையில் கோவை எம்.பி. சுப்பராயன் எழுந்து,அப்பாத்துரை எம்.பி. மீது பல்வேறு புகார்களைக் கூறி பேசத் தொடங்கினார். இதனால்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சுப்பராயன் தொடர்ந்து பேசுகையில், கட்சிப் பெயரை பயன்படுத்தி அப்பாத்துரை பலலட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்து விட்டார். கட்சிக்கு அவப்பெயரைஏற்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன.

அவரது செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்டதும் அப்பாத்துரை எம்.பி. கோபமடைந்தார்.

அவருக்கும், சுப்பராயனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது பற்றி, இருவரும் கைகலப்பிலிரும் இறங்கியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்கள்இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதாக தெரிகிறது. மூத்த தலைவர்கள்முன்னிலையில் நடந்த இந்த மோதலால் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

பின்னர் நிர்வாகிகள் சிலர் தலையிட்டு இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இந்தகளேபரததைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் கூட்டத்தை முடித்துக் கொண்டுஅனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+