ஹெராயின் ராகுல் மகாஜன் ஜாமீனில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

போதைப் பொருள் வழக்கில் கைது செய்து 6 நாட்கள் சிறையில் இருந்த ராகுல் மகாஜன் ஜாமீனில்விடுவிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த மூத்த பஜாக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் கடந்த 1ம் தேதி டெல்லியில் உள்ளஅவரது வீட்டில் ஹெராயின், கொகைகன் உள்ளிட்ட போதைப் பொருள்களை காக்டெயிலாகக் கலந்து மதுவுடன்சேர்த்து அடித்து மயங்கினார். இதே வேலையைச் செய்த அவரது உதவியாளர் விவேக் மொய்த்ரா இறந்துவிட்டார்.

ஆபத்தான நிலையில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ராகுல் உயிர் பிழைத்தார். அவர் மீது போலீசார்போதை பொருள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ராகுல் கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ராகுலை ஜாமீனில் விட வேண்டும் என்று கோரி, அவரது சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகும் வரை, ராகுல் டெல்லியை விட்டு வெளியேசெல்லக்கூடாது. வழக்கின் சாட்சிகளை கலைக்க கூடாது. அவர்களுடன் பேசக்கூடாது. கோர்ட்டு அனுமதி இன்றிவெளிநாடு செல்லக்கூடாது. தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். போலீசார் அழைக்கும்நேரத்தில், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ராகுல் மீது பதிவான போதைப் பொருள் வழக்கு ஜாமீன் பெற முடியாத குற்றப் பிரிவுகளை கொண்டது. இதனால்ராகுலுக்கு ஜாமீன் கிடைக்காது என்று போலீசார் நம்பியிருேந்தனர். மேலும் ராகுலின் வேலைக்காரர் கரம்அகுஜாவின் வாக்குமூலம் ராகுலை ஜாமீனில் விட முடியாத அளவில் இருப்பதாகவும் போலீசார் உறுதியாகநம்பிக்கையோடு இருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக ராகுலுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.போலீசார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் இருக்கும் ஒட்டைகளே ராகுலுக்கு ஜாமீன் கிடைக்கக் காரணம்என்று தெரிகிறது.

நீதிமன்ற உத்தரவுபடி இரவு 7 மணிக்கு ராகும் மகாஜன் டெல்லி திகார் ஜெயிலில் இருந்து விடுதலைசெய்யப்பட்டார். அவரை சிறை வாசலில் அவரது தாயார், சகோதரி, உறவினரும் முன்னாள் மகாராஷ்டிரமுதல்வருமான முண்டே ஆகியோர் வரவேற்றனர்.

வாய் திறந்த பிரவீன் மகாஜன்:

இந் நிலையில் பிரமோத் மகாஜானை சுட்டுக் கொன்ற அவரது தம்பி பிரவீன் மகாஜன் முதன் முறையாக ராகல்விஷயத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மும்பை சிறையில் இருக்கும் பிரவீன் மகானை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது.நீதிமன்ற வாசலில் வைத்து நிருபர்களிடம் பேசிய பிரவீன்,

ராகுல் நல்ல பையன். அவரை கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளானதற்கு, அவரது தந்தை பிரமோத்மகாஜனும், அண்ணியும், பிரமோத்தின் உதவியாளர் விவேக் மொய்த்ராவும் தான் காரணம். அவர்கள் ராகுலைநல்ல வாலிபனாக வளர்க்கவில்லை.

பிரமோத் மகாஜன் மரணத்துக்கும், ராகுல் மீதான போதைப்பொருள் வழக்குக்கும் சம்பந்தம் உண்டு. எனவேமும்பை, டெல்லி போலீசார் இதை இணைத்து விசாரிக்க வேண்டும். இது பற்றி முழு விவரத்தையும் நான்கோர்ட்டில் வெளியிடுவேன் என்றார்.

தான் செய்த கொலைக்கும் ராகுல் விவகாரத்துக்கு முடிச்சு போட்டு பிரவீன் மகாஜன் புது குண்டு வீசியுள்ளதுஇந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+