ஸ்டாலின்: கத்தி யாருடையது?-புதிய தகவல்
மதுரை:
மதுரை ரயில் நிலையத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வந்ததிமுக தொண்டர் ஒருவர் தொலைத்த கத்தியை வைத்துத்தான் மர்ம நபர் ஸ்டாலினைகொல்ல முயன்றதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்ற நபர் குறித்த மர்மம்இன்னும் விலகவில்லை. கத்தியை போட்டுவிட்டு ஓடிய அந்த நபரைப் பிடிக்க 8தனிப்படைகளை அமைத்து மதுரை போலஸீார் தீவிரமாக தேடி வருகின்றனர்.அவரது முகத்தை கம்ப்யூட்டர் உதவியால் வரைந்து தேடி வருகின்றனர்.
மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கத்தியால் குத்த முயன்று துணிகரமாக தப்பித்தஅந்த நபர் குறித்த துப்பு கொடுத்தால் ரூ. 10,000 பரிசு கொடுக்கப்படும் என்றும்போலீஸார் அறிவித்துள்ளனர்.
ஆனால், போலீஸாரின் முயற்சிக்கு இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை.எந்தவித துப்பும் கிடைக்காமல் போலீஸார் தடுமாறி வருகின்றனர்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஸ்டாலினை வரவேற்க அன்று வந்த திமுகவினர் மத்தியில் ஒரு தொண்டர் நின்றுகொண்டிருந்தார். அவர் கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனவர் என்று கூறபபடுகிறது.
தனது சுய பாதுகாப்புக்காக எப்போதும் அவர் கையில் கத்தி வைத்திருப்பாராம்.மேலும் ஆயுதம் தாங்கிய சிலரையும் பாதுகாப்புக்காக கூடவே வைத்துக்கொண்டிருப்பவர் இவர்.
ஸ்டாலினை வரவேற்க வந்தபோது அவரது பாதுகாவலர்களில் ஒருவர் கத்தியைத்தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது.
அந்த கத்தியை வைத்துத்தான் அந்த மர்ம நபர் ஸ்டாலினைத் தாக்க முயன்றதாகபோலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த திமுக தொண்டரிடமும்போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
அதேபோல இன்னொரு சந்தகேமும் கிளப்பப்படுகிறது. மர்ம நபர் வைத்திருந்த கத்தி6 இன்ச் நீளமுள்ளது. பிளாஸ்டிக் கைப்பிடியுடன் கூடிய இதற்கு ராம்போ கத்தி என்றுபெயர். வழக்கமாகக் கூலிப் படையினர்தான் இந்தக் கத்தியை பொதுவாகவைத்திருப்பார்களாம்.
மொத்தத்தில் ஸ்டாலினைத் தாக்க முயன்றது யார், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்அவர் மாயமாகி சென்றது எப்படி என்ற கேள்விகளுக்கு இதுவரை விடைகிடைக்கவில்லை.
அந்த நபரைப் பிடிக்காமல் விட்டால் காவல்துறையினரின் பெயரும் சேர்ந்து கெடும்என்பதால் மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: ஸ்டாலின்
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக நாகர்கோவில் வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில்,
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் படிப்படியாகநிறைவேற்றப்படும்.
சிறப்பு ஊராட்சிகளை மீண்டும் பேரூராட்சிகளாக மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தந்தவுடன் அதுதொடர்பாகமுடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே நடத்திமுடிக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
