ஐநா தலைவர் பதவியை குறி வைக்கும் இந்தியா
சிங்கப்பூர்:
கோபி அன்னான் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பொதுச் செயலாளராக உள்ள சசி தரூரை, பொதுச் செயலாளர் தேர்தலில் நிறுத்தஇந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக உள்ள கோபி அன்னானின் பதவிக்காலம் இந்தஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பொதுச் செயலாளர் யார்என்ற ஆவல் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.இந்தத் தேர்தலில் தற்போதைய ஐ.நா சபையின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளசசி தரூரை வேட்பாளராக நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூரிலிருந்துவெளி வரும் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
விரைவில் டெல்லியில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்வெளியிடப்படும் எனவும் அந்த நிாளிதழ் தெரிவித்துள்ளது.
50 வயதாகும் தரூர், 1978ம் ஆண்டு ஐ.நா. சபையில் தனது பணியைத் தொடங்கினார்.தற்போது ஐ.நா. சபையின் பொது தகவல் பிரிவின் தலைவராக உள்ளார். இந்தியர்என்றாலும் கூட தரூர் லண்டனில் பிறந்தவர்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் படிப்பை முடித்த தரூர், பல்வேறு நூல்களையும்எழுதியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மன்மோகன் சிங், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துதான் போட்டியிடுவதற்கு ஆதரவு கோரினார் தரூர்.
பிரதமர் உள்ளிட்ட தலைவர்களின் ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது தரூர்பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.
அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று ஏற்கனவே சீனா கூறியுள்ள நிலையில், இந்தியாவின் இந்த முடிவுமுக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவே, ஐ.நாவுக்கான இலங்கை தூதர் ஜெயந்தா தனபாலா, தென் கொரியவெளியுறவுத்துறை அமைச்சர் பான் கிமூன், தாய்லாந்து நாட்டு துணைப் பிரதமர்சுரக்கியார்ட் சதிரத்தாய் ஆகியோர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடிவுசெய்துள்ளனர்.
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பதவியில் கடைசியாக மியான்மர் (முந்தையபர்மா) நாட்டின் யூ தாண்ட் 1961ம் ஆண்டு முதல் 1971 வரை பதவி வகித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த யாரும் அப்பதவிக்குதேர்வு செய்யப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications