அன்புமணியை குறி வைக்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள்
சென்னை:
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனரான டாக்டர்பி.வேணுகோபால்தான் சமீபத்தில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மருத்துவர்கள்மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டத்தை தூண்டி விட்டார் என்று மத்தியசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி அகிலஇந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறுமருத்துவமனை மருத்துவர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேல் நடந்த இந்தப் போராட்டம் உச்சநீதிமன்றத்தின்கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், தங்களது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், அமைச்சர்அன்புமணியின் தூண்டுதலால்தான் தங்களது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவர்கள்மற்றும் மாணவர்கள் பிரமதர் மன்மோகன் சிங்குக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
மேலும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குனராக உள்ளவேணுகோபால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகாருக்கு அமைச்சர் அன்புமணி விளக்கம்கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், சமீபத்தில் டெல்லியில் நடந்த மருத்துவமாணவர்கள், மருத்துவர்களின் போராட்டத்துக்கு முக்கிய காரணமே அகில இந்தியமருத்துவ அறிவியல் கழக இயக்குனர் டாக்டர் வேணுகோபால்தான்.
அவரது தூண்டுதலின் பேரில்தான் இந்த வேலைநிறுத்தமே நடந்தது.
இந்தப் பதவியில் நீடிக்க அவர் விரும்பவில்லை என்றால் தாராளமாக பதவியைவிட்டு அவர் விலகிக் கொள்ளலாம். அதை விடுத்து பதவி விலகப் போவதாக அவர்மிரட்டிக் கொண்டிருக்கக் கூடாது.
இப்போது என் மீது புதிய புகாரை எழுப்பியுள்ளனர். இது ஒரு பிரச்சினையே இல்லை.யாரெல்லாம் போராட்டத்தைத் தூண்டி விட்டார்களோ, அவர்கள்தான் இப்போதையபிரச்சினைக்கும் பின்னணியில் உள்ளனர். உள்நோக்கத்துடன் இந்தப் புகார்கள்தெரிவிக்கப்படுகின்றன.
டாக்டர்கள் இதுபோல சில்லறைத்தனமாக நடந்து கொள்வதை விட்டு விட்டுஒழுங்காக தங்களது பணியில் கவனம் செலுத்தினாலே இதுபோன்ற பிரச்சினைகள்எழாது. கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவமனை செயலிழந்து கிடக்கிறது. நிர்வாகத்தில்ஒழுங்கீனம் அதிகரித்து விட்டது.
மருத்துவமனையின் தலைவர் நான். குடியரசுத் தலைவர்தான் இந்த நியமனத்தைமேற்கொண்டவர். எனவே மருத்துவமனையின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடஎனக்கு முழு உரிமை உண்டு. இங்கு நிலவும் பிரச்சினைகளை சரி செய்யவும் எனக்குஅதிகாரம் உண்டு.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகஇருந்தாலும் கூட, அதன் நல்லதுக்காகத்தான் நான் அதன் விவகாரங்களில்தலையிடுகிறேன். இதன் மூலம் தன்னாட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல்போய் விடும் எனக் கூறுவதை ஏற்க முடியாது.
முன்பு இந்தக் கழகத்திற்கு ரூ. 350 கோடி அளவுக்குத்தான் நிதி வருவாய் இருந்தது.நான் தலையிட்டுத்தான் பட்ஜெட்டில் கூடுதலாக ரூ. 150 கோடி நிதி கிடைக்க ஏற்பாடுசெய்தேன். இப்போது ரூ. 500 கோடி நிதி பட்ஜெட்டில் இம் மருத்துவமனைக்குஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மருத்துவமனை சரிவர இயங்காமல் முடங்கிப்போய்க் கிடந்தது. நான் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் சரி செய்த பிறகுதான் நல்லமுறையில் இயங்கத் தொடங்கியுள்ளது.
அதேபோல புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும் கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவரசெயல்படவில்லை.
பல் சிகிச்சைப் பிரிவு 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது. இதுதவிர பல்வேறுதுறைகளிலும் 800 புதிய ஊழியர்களை நியமிக்க நான் ஏற்பாடு செய்தேன்.இக்கழகத்தின் நிர்வாகத்தை பிரதமர் அலுவலகம் தனது நேரடிக் கட்டுப்பாட்டில்எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை உள்நோக்கம் கொண்ட சிலரால்எழுப்பப்படும் கோரிக்கை ஆகும் என்றார் அன்புமணி.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக இயக்குநர் மீது அன்புமணி பகிரங்கமாககுற்றம் சாட்டியிருப்பதால் புதிய பிரச்சினை கிளம்பும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications