சென்னை பல்கலை. துணைவேந்தர் மீது பெரும் நிதி மோசடி வழக்கு!
சென்னை:
சென்னை பல்கலைக்கழக நிதியில் துணைவேந்தர் தியாகராஜன் முறைகேடுசெய்துள்ளதாகவும் அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் சென்னைஉயர்நீதிமன்றத்தில் பேராசிரியர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர்தெய்வசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தியாகராஜன் சென்னைபல்கலைக்கழக துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். பல்கலைக்கழக நிர்வாகத்தைசீரிய முறையில் நடத்த அவர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை.
ஆனால் தனிப்பட்ட முறையில் பல ஆதாயங்களை அடைந்துள்ளார். இதற்காகதுணைவேந்தர் பதவியை அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரீடர்கள் ஆகியோரை அவர் அவமானப்படுத்தும்வகையில் நடந்து கொண்டார்.
பல்கலைக்கழக வேலை வாய்ப்புத் திட்டத்தில் புதிதாக நேர்காணல் முறையை அவர்அறிமுகப்படுத்தினார். இந்த முறையை நீக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுபலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் தனக்குவேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்க அவர் உதவினார்.
இதேபோல பல்கலைக்கழகத்திற்குக் கட்ட வேண்டிய கட்டணங்களை பல்கலைக்கழகவளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில்தான் மாணவர்கள் கட்டுவார்கள். ஆனால்தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமாக தியாகராஜன் செயல்பட்டுஇனிமேல் கட்டணங்களை அந்த வங்கியில்தான் அனைவரும் கட்ட வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
மேலும் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய ரூ. 30 கோடி பணத்திலும்தியாகராஜன் முறைகேடு செய்துள்ளார். இந்த நிதியை செலவிட்டதற்கு முறையானகணக்கு இல்லை.
இதுதவிர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள செனட் மாளிகையை புதுப்பிக்கும்பணிக்காக பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்தப் பணத்திலும்தியாகராஜன் முறைகேடு செய்துள்ளார். இந்த செலவுக்கும் முறையான கணக்குஇல்லை.
ரூ. 6 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பணியை முறையானடெண்டர் விடாமல் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒருகாண்டிராக்டருக்கு பணியைக் கொடுத்துள்ளார் தியாகராஜன்.
ஸ்டேட் வங்கி மற்றும் பல்வேறு அரசு நிதி நிறுவனங்களில் பல்கலைக்கழகத்தின்நிதியான ரூ. 230 கோடி இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணத்திலிருந்து ரூ. 100 கோடியை இன்னொரு நிதி நறுவனத்திற்குமாற்றியுள்ளார் தியாகராஜன். நிதியை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கானஅவசியம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை தியாகராஜன்.
மேலும் இதற்கு பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அனுமதியையும் அவர் பெறவில்லை.
சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டி மத்திய அரசு ரூ.100 கோடி நிதியை பல்கலைக்கழகத்திற்கு சமீபத்தில் அளித்தது. இந்தப் பணத்தையும்தியாகராஜன் ஊதாரித்தனமாக செலவழித்து விடுவார் என்ற அச்சம் அனைவர்மனதிலும் ஏற்பட்டுள்ளது.
எனவே தியாகராஜன் செய்த பண முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் குறித்து சிபிஐசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், தியாகராஜன் உள்ளிட்டசம்பந்தப்பட்டவர்களுக்கு எட்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கூறி நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications