ராமேஸ்வரத்தில் ரூ. 100 கோடியில் துறைமுகம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமேஸ்வரத்தில் ரூ. 100 கோடி செலவில் பெரிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத் தகவலை மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர் பாலுதெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டப் பணிகள் தொடர்பாக ராமேஸ்வரத்தில் ஆய்வு மேற்கொண்டபின் டி.ஆர்.பாலு கூறியது,

எதிர்காலத்தில் கடல்வழி போக்குவரத்தின் தேவை மிகவும் அதிகரிக்கும். அதை கருத்தில் கொண்டுராமேஸ்வரத்தில் முன்னதாக ரூ. 30 கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த துறைமுகம், தற்போது ரூ.100கோடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேது சமுத்திர கால்வாய் வழியாகச் செல்லும் பல்வேறு கப்பல்கள் இங்கு நின்று செல்லும் வகையில் பல்வேறுவசதிகளுடன் கூடிய தளங்கள் இங்கு அமைக்கப்படும். 10 பெரிய கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு தளங்கள்அமைக்க்ப்படும்.

இந்தத் துறைமுகம் அமைக்க சேது சமுத்திரத் திட்ட கழகம் ரூ. 25 கோடி கொடுக்கும். மீதமுள்ள தொகையைஎப்படிப் பெறுவது, என்பது குறித்து தமிழக முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்.

மண்டபம் முகாமில் அமைக்கப்படும் இந்தத் திட்ட அலுவலகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.இப்பகுதியை சேர்ந்த மீனவ சமுதாயத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைவழங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+