ஜெயலிதாவுக்கு கடிதம் எழுதிய கருணாநிதி!!!!
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார்கருணாநிதி.அவரது செயலாளர்களான முனீர் ஹோதாா, டிஆர் ராமசாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் திமுகவின் தேர்தல்அறிக்கையை பட்ஜெட்டாக மாற்றுவதில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் நாகநாதனுடன் இரவு பகலாகடிஸ்கஷனில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த டீம் மற்ற துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடனும்ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந் நிலையில் பட்ஜெட்டிலேயே இலவச கலர் டிவிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடவும்,உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே கலர் டிவிக்களை வழங்கிவிடவும் முதல்வர் கருணாநிதி முடிவுசெய்துள்ளார்.
இதையடுத்து கலர் டிவிக்கள் வாங்குவது தொடர்பாகவும், டெண்டர்கள் முடிவு செய்வது தொடர்பாகவும்அனைத்து கட்சிக் குழுவை அமைக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு தானே கைப்பட கடிதமும் எழுதிஅனுப்பியுள்ளார்.
அதில், கலர் டிவி வாங்க சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு அமைப்பேன் என்றுதேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னேன். அதன்படி குழு அமைக்க விரும்புகிறேன். உங்கள் கட்சியின் சார்பில்குழுவில் இடம்பெறும் சட்டமன்ற உறுப்பினரின் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
தனது கையெழுத்துடன் கூடிய இந்தக் கடிதங்களை எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தைத் பெற்றுக் கொண்டதற்கான அக்னாலட்ஜ்மெண்டையும் இந்தத் தலைவர்களிடம் இருந்துபெற்றுவிட்டதாம் அரசுத் தரப்பு.
இந்தக் கடிதத்துக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் பதில் வந்துவிட்ட நிலையில்ஜெயலலிதாவிடம் இருந்து பதில் வரவில்லை. அதே போல வைகோ, திருமாவும் பதில் அனுப்பவில்லை என்றுதெரிகிறது.
இதனால் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை கமிட்டியில் இடம் பெறுவார்களா என்பதுசந்தேகமாகவே உள்ளது.
இவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் விரைவிலேயே கலர் டிவி டெண்டரை பரிசீலிக்க சட்டமன்றக் கட்சிதலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை வரும் விவசாயிகள்:
இதற்கிடையே கூட்டுறவு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜூலை மாதம் 5ம்தேதி சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்திக்கவுள்ளனர்.
ஈரோட்டில் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஆட்சியில் கடன் நிலுவைத் தொகையை திருப்பிக் கேட்டுவிவசாயிகள் துன்புறுத்தப்பட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனேயே 60 லட்சம் விவசாயக் குடும்பங்களை கடன் சுமையிலிருந்து மீட்டுள்ளார் கருணாநிதி.
முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் நன்றிக் கடன் பட்டுள்ளனர். எனவே அவரை நேரில் சந்தித்துப் பாராட்டுவதற்காக ஆயிரக்கணக்கானவிவசாயிகளுடன் அடுத்த மாதம் 5ம் தேதி சென்னை செல்கிறோம்.
அதேபோல, குதிரைப் பந்தயத்தை ஒழித்ததற்காக சென்னையில் குதிரை வீரன் சிலை நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதைப் போல, விவசாயிகளின் கடன்சுமையை ஒழித்ததற்காக சென்னையிலோ அல்லது தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றிலோ மாபெரும் நினைவுச் சின்னம் ஒன்றையும் எங்களது கட்சிஅமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் செல்லமுத்து.
இது மகா ஐஸ்சா இல்ல இருக்கு..












Click it and Unblock the Notifications