மதானிக்கு சிறையிலேயே சிகிச்சை?
கோவை:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானிக்கு, சிறையிலேயே சிகிச்சை அளிப்பதற்கான வசதி இருக்கிறதாஎன்று கேட்டு கோவை சிறை நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கோவை மத்தியசிறையில் மதானி அடைக்கப்பட்டுள்ளார். செயற்கைக் காலுடன் உள்ள அவருக்குசர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, முதுகு வலி உள்ளிட்ட உபாதைகள் உள்ளன.சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், மதானிக்கு சிறந்தமுறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், மனிதாபிமானஅடிப்படையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார்.
மருத்துவ சிகிச்சை தர தமிழக அரசு ஏற்பாடு செய்யும். ஜாமீனில் விடுவிப்பதுதொடர்பான நடவடிக்கைகளை நீங்கள் நீதிமன்றம் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள்என்று அவரிடம் கருணாநிதி கூறிவிட்டார்.
இந்த நிலையில், கோவை சிறைத்துறை டிஐஜி முனிவேல், மாநகர காவல்துறைஆணையர் கரண் சின்ஹா ஆகியோருக்கு தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது.அதில், மதானிக்கு கோவை சிறை மருத்துவமனையிலேயே மருத்துவ சிகிச்சை தரமுடியுமா? அதற்கான வசதி உள்ளதா? அப்படி இருந்தால் அதற்குரிய வார்டைசுத்தப்படுத்தி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்று தமிழக அரசுகேட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் சிறைமருத்துவர்களும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஓரிரு நாட்களில்இதுதொடர்பாக அரசுக்குக் கடிதம் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications