கோவை மருத்துவமனையில் மதானிக்கு சிகிச்சை?
கோவை:
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானிக்கு அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபடவுள்ளது.
கோவை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி கோவை மத்திய சிறையில் மதானிஅடைக்கப்பட்டுள்ளார். செயற்கைக் காலுடன் உள்ள அவருக்கு சர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, முதுகு வலிஉள்ளிட்ட உபாதைகள் உள்ளன.சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், மதானிக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கஏற்பாடு செய்ய வேண்டும், மனிதாபிமான அடிப்படையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார்.
மருத்துவ சிகிச்சை தர தமிழக அரசு ஏற்பாடு செய்யும். ஜாமீனில் விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளைநீங்கள் நீதிமன்றம் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கருணாநிதி கூறிவிட்டார்.
இந்த நிலையில், கோவை சிறைத்துறை டிஐஜி முனிவேல், மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாஆகியோருக்கு தமிழக அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், மதானிக்கு கோவை சிறை மருத்துவமனையில்சிகிச்சை தர போதுமான வசதிகள் உள்ளனவா என்றும் கேட்டறியப்பட்டது.
இதுபற்றி விவாதிக்க நேற்று ஜஜி.சுப்பிரமணியம், கமிஷனர் கரன்சின்ஹா, சிறைத்துறை டிஜஜி.முனிவேல மற்றும்அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜெயிலில் டிஜஜி முனிவேல், எஸ்பி ராஜேந்திரன்ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் இயக்குநர் கலாநிதி, ஆர்எம்ஓ அங்குசாமி ஆகியோரிடம்ஆலோசனை நடத்தினார்கள்.
அரசு மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கான்விட் வார்டை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.போதுமான பாதுகாப்புகள் உள்ளனவா என்றும் பார்வையட்டனர். இதற்கான விவரத்தை அரசு சிறை நிர்வாகம்அறிக்கை அனுபிப வைத்தது.
தமிழக அரசு உத்தரவுக்கு பின் மதானிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications