மீண்டும் ஓட்டுச் சீட்டு: வைகோ கோரிக்கை
மதுரை:
மின்னணு இயந்திர வாக்குப் பதிவு முறையை ரத்து செய்து விட்டு மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் நடந்த மதிமுக பிரமுகர் பொடா கணேசன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வைகோ பேசுகையில், பொடா கணேசன் என்னுடன் 19 மாதம் சிறையில்இருந்தவர்.தாயாய், பிள்ளையாய் அப்போது நாங்கள் பழகினோம். எங்களது துன்பங்களைசாதாரணமாக எடுத்துக் கொண்டோம்.
சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்குப் பதில் ஓட்டுச்சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் முடிவே வேறு மாதிரியாக இருந்திருக்கும்என்ற கருத்து நிலவுகிறது.
இந்தக் கருத்தை தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
கம்ப்யூட்டர் உலகில் கொடி கட்டிப் பறக்கும் அமெரிக்காவில் கூட ஓட்டுச்சீட்டுக்கள்தான் தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்தியாவிலும்மீண்டும் ஓட்டுச் சீட்டு முறையைக் கொண்டு வருவது குறித்து சிந்திக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மதுரை மத்திய தொகுதிக்கும் விரைவில் தேர்தல்வரவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியினர் மிகப் பெரும் வெற்றியைப்பெறுவார்கள். அதற்காக கூட்டணிக் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தரவேண்டும். மதிமுக என்று ஒரு கட்சி இருக்கிறதா என்று கலைஞர் கேட்டிருந்தார்.இதை பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து அதிமுக தலைமையில்நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கூடிய பெரும் திரளான மதிமுக தொண்டர்கள்தக்க பதில் கொடுத்து நிறுபித்துள்ளார்கள்.
கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்று கலைஞர் முன்பு கூறியிருந்தார். இப்போது அவர்காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க தயக்கம் காட்டுகிறார். ஏன் இந்த மாற்றம் என்பதைஅவர் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications