கட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட ஒட்டகங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இறைச்சிக்காக வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட 2 ஒட்டகங்களை மீட்டு கிண்டிசிறுவர் பூங்காவில் பாதுகாப்பாக பராமரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் பொது நலன் மனு ஒன்றை சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், இறைச்சிக்காக வெளிமாநிலத்திலிருந்துதமிழகத்திற்கு ஒட்டகங்களை கொண்டுவர தடை உள்ளது.

ஒட்டகங்களுக்கு ஆந்த்ராக்ஸ், சுர்ரா என இருவித நோய்கள் வரும். இது தொற்றுநோய்களாகும். இதனால் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒட்டகங்களைகொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 42 ஒட்டகங்களும்,விழுப்புரத்தில் ஒரு ஒட்டகம் வெட்டப்பட்டன. இந்த நிலையில் தற்போது சென்னைடிவி நிலையம் அருகே இரு ஒட்டகங்கள் வெட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதைத் தடுத்து நிறுத்தி இரு ஒட்டகங்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் வனத்துறை வழக்கறிஞர்வாதங்கள் நடத்தினர்.

அதன் பின்னர் இரு ஒட்டகங்களையும் உடனடியாக தலைமை வன விலங்கு அதிகாரிமீட்டு, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில்பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றுநீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. விடுதி அருகே ரயில் பாலத்தின் கீழ் சங்கரன்என்பவர் வசம் இருந்த இரு ஒட்டகங்களையும் வனத்துறையினர் மீட்டனர். அவற்றைலாரியில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.

ஆனால் லாரியில் ஏறாமல் ஒட்டகங்கள் முரண்டு பிடித்தன. சுமார் ஒரு மணி நேரப்போராட்டத்திற்குப் பின்னர் ஒரு ஒட்டகம் மட்டும் லாரியில் ஏறியது. இன்னொருஒட்டகத்தை நடத்தியே கிண்டி பூங்காவுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

இந்த ஒட்டகங்களை தலா ரூ. 35,000 கொடுத்து ஹைதராபாத்திலிருந்து சங்கரன்வாங்கி வந்துள்ளார். இவர் பல குதிரைகளை வளர்த்து வருகிறார்.

இறைச்சிக்காக இந்த ஒட்டகங்களை தான் வாங்கி வரவில்லை என்றும் கடந்தபொங்கல் பண்டிகையன்று நடந்த கலை நிகழ்ச்சிக்காகவே வாங்கி வந்ததாகவும்,அதன் பின்னர் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது நடந்தஅரசியல்கட்சிகளின் ஊர்வலங்கள், கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், கல்யாணநிகழ்ச்சிகளில் இவற்றை வாடகைக்கு விட்டு வந்ததாகவும் சங்கரன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+