சிங்கள கடற்படை துப்பாக்கிச் சூடு: தமிழக மீனவர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் வெறித்தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார். பல படகுகள் துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்தன.

இலங்கையில் போர் வெடித்துள்ளது. இலங்கை ராணுவம், கடற்படை மற்றும்விமானப்படைகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் நிலைகள் மீது தொடர்தாக்குதலை தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மாலை 200க்கும்மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குதிடீரென இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர்.

தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் எந்தவித எச்சரிக்கையும் தராமல்சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பல படகுகள் சேதமடைந்து கடலில்மூழ்கின. ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு வந்தனர்.

காயமடைந்த மீனவருக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தபின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக்கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த வெறித் தாக்குதலால் ராமேஸ்வரம் மீனவர்கள்மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+