ஸ்டாலின் மீதான தாக்குதலில் புதிய திருப்பம்
மதுரை:
மதுரை ரயில் நிலையத்தில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் தொடர்பாகஸ்டாலினுடன் இருந்த திமுக பிரமுகர் மீது போலீஸார் சந்தேகம்அடைந்துள்ளனர்.ஆனால் தான் அப்பாவி என்று அந்த திமுக பிரமுகர்தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு கடந்த 13ம் தேதி வந்த ஸ்டாலினை வரவேற்க ரயில் நிலையத்தில் திமுகதொண்டர்கள் பெரும் திரளாக கூடியிருந்தபோது, போலீஸ் மற்றும் தொண்டர்களின்பாதுகாப்பு வளையத்தை மீறிஒரு நபர் ஸ்டாலினை கத்தியால் குத்த முயன்றதாகவும், அதை போலீஸார் தடுத்துநிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கத்தியால் குத்த முயன்ற நபர் தப்பி ஓடி விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் பல்வேறு தனிப்படைகளைஅமைத்துத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மதுரை போலீஸார் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் புதிய பரபரப்புஏற்பட்டுள்ளது. போலீஸார் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், ஸ்டாலினுக்குஅருகே கண்ணாடி அணிந்த ஒரு பிரமுகர் நிற்கிறார்.
அவரது முகமும், போலீஸார் கம்ப்யூட்டர் உதவியினால் வரைந்த குற்றவாளியின்முகமும் ஒரே மாதிரியாக உள்ளது. புகைப்படத்தில் உள்ள நபர்தான் குற்றவாளியாகஇருக்க முடியும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த நபர் யார் என்று மதுரை வட்டார திமுகவினரிடம் போலீஸார் விசாரணைநடத்தியபோது அவர் யார் என்று தெரியவில்லை என அனைத்து திமுகவினரும் கூறிவிட்டதால் அந்த நபர் மீது சந்தேகம் வலுத்தது.
உடனடியாக இந்தப் புகைப்படத்தை மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனிஉள்ளிட்ட அருகாமை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு போலீஸார்அனுப்பி வைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில், புகைப்படத்தில் உள்ள நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சேகரன். திமுகவைச் சேர்ந்தவர். இவரதுமனைவி ஒரு ஆசிரியை. சம்பவ தினத்தன்று ஸ்டாலினை வரவேற்க இவரும் ரயில்நிலையம் வந்திருந்தார்.
தேனி மாவட்டத்துக்காரர் என்பதால் மதுரை திமுகவினருக்கு இவரை அடையாளம்தெரியவில்லை. தன் மீது போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளது குறித்து அறிந்துஅதிர்ந்த சேகரன், உடனடியாக தேனி மாவட்ட திமுக செயலாளரை சந்தித்து தான்அப்பாவி, ஸ்டாலினை வரவேற்க மட்டுமே அங்கு சென்றதாக விளக்கியுள்ளார்சேகரன்.
அவருடன் வந்த திமுகவினரும், சேகரன் ஸ்டாலின் வரவேற்புக்காகவே மதுரைசென்றதாக தெரிவித்தனர். இந்தத் தகவல் மதுரை போலீஸாருக்கும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழம்பியுள்ள போலீஸார் சேகரன் குறித்து ரகசியவிசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஸ்டாலினை வரவேற்க வந்த திமுக பிரமுகர் ஒருவர் தனது சுய பாதுகாப்புக்காக சிலஆயுதம் தாங்கிய நபர்களுடன் ரயில் நிலையத்திற்கு வந்திருந்ததாகவும், அந்தநபர்களில் ஒருவர் தவற விட்ட கத்தியைத்தான் போலீஸார் கைப்பற்றியதாகவும்முன்பு ஒரு தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் போலீஸார் சந்தேகப்படும் நபரும் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால்ஸ்டாலின் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications