ஆசிரியர்கள் இடமாற்றம்: அரசுக்கு கிறிஸ்தவ அமைப்பு எச்சரிக்கை
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்புகள் நடத்தும் பள்ளிகளைச்சேர்ந்த 116 ஆசிரியர்களை பொய்யான காரணங்களைக் கூறிவெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதை திரும்பப் பெறாவிட்டால்போராட்டம் நடத்தப் போவதாக தென்னிந்திய கிறிஸ்தவ சபையின் தூத்துக்குடிமாவட்டக் கிளை எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கீழநாலுமாவடி என்ற இடத்தில் அரசு உதவி பெற்று இயங்கிவரும் கிறிஸ்தவ பள்ளியில் கடந்த ஆண்டு 5 மாணவர்களே சேர்ந்ததாகவும், ஆனால்ஏராளமான மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி அப்பள்ளியின் ஆசிரியைஹெலன் சம்பளம் பெற்று வந்ததாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது.இதையடுத்து அங்கு சோதனை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் ஹெலனை வேறுமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்தனர்.
அந்தப் பள்ளியையும் மூட நடவடிக்கை எடுத்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும்சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளைச் சேர்ந்த 116 ஆசிரியர், ஆசிரியைகளைகல்வித்துறை அதிகாரிகள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
இதற்கு தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவர்பாதிரியார் ஜெபச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைஉள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
வேண்டும் என்றே பொய்யான காரணங்களைக் கூறி ஆசிரியர், ஆசிரியைகளைஇடமாற்றம் செய்துள்ளனர். இந்த உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். இல்லாவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications