தனித்துப் போட்டி: இளங்கோவன் புதுப் புயல்:காங் பிரமுகரை வெளுத்த ஈவிகேஸ் மகன்!
ஈரோடு:
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்றுமத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். மேலும்திமுககவுக்கும் மறைமுகமாக எச்சரஹிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரோடு வந்த இளங்கோவன் கூட்டத்தில் பேசுகையில், இன்னும் சிலமாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது எனது எண்ணம்.இந்தக் கருத்தை சோனியா காந்தியிடம் தெரிவித்து உரிய முடிவு எடுக்கவலியுறுத்துவோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 30,000 இடங்கள் உள்ளன. இதில் 1 லட்சம்இடங்களில் நாம் வெற்றி பெற்று, நாம் யார் என்பதை சிலருக்கு நிரூபிக்க வேண்டும்.
நமது லட்சியம் காமராஜர் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பது. இன்றைக்குஇல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நனவாகும். சிலருக்கு காமராஜர் ஆட்சிபற்றிப் பேசினால், காமராஜர் புகழ் பாடிப் பேசினால் பிடிக்கவில்லை, எரிச்சலாகஇருக்கிறது.
அதைத் தட்டிக் கேட்க காங்கிரஸ் தலைவர்களாலும் முடியவில்லை. அந்த அளவுக்குநம்மை அவர்கள் கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள். தலைவர்களாகிய எங்களுக்குசில கட்டுப்பாடுகள், தர்மசங்கடங்கள் உள்ளன.
இப்படிப் பேசினால் அவர் கோபித்துக் கொள்வார், இப்படிப் பேசினால் இவர்கோபித்துக் கொள்வார் என்ற நிலை எங்களுக்கு. ஆனால் தொண்டர்களாகியஉங்களுக்கு அப்படி அல்ல,வெட்டு ஒன்று என்றால் துண்டு ரெண்டு என்பது போலமனதில் பட்டதை நீங்கள் பேசலாம், செய்யலாம்.
மத்தியில் ஆட்சியில் பங்கேற்றுள்ளீர்கள், எனவே மாநிலத்தில் எங்களுக்கு பங்குதாருங்கள் என்று காங்கிரஸார் கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை அதற்கானவாய்ப்பு அமையாமல் உள்ளது.
விவாதம் நடந்து வருகிறது. உள்ளே இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது கூட்டணிஆட்சிதான். காரணம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அப்படி!
காமராஜர் ஆட்சியை மீண்டும் நாம் ஒரு நாள் கண்டிப்பாக கொண்டு வருவோம்.இதற்காக கட்சியில் உள்ள இளைஞர்கள் கடுமையாக போராட வேண்டும். மனமாச்சரியங்களை மறந்து பாடுபட வேண்டும் என்றார் இளங்கோவன்.
முன்பு ஆட்சியில் பங்கு குறித்த விவாதத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு பேச்சைஆரம்பித்து சர்ச்சையில் சிக்கி திமுகவின் கோபத்திற்கு ஆளானார் இளங்கோவன்.இப்போது தனித்துப் போட்டி என்ற புதுப் புயலைக் கிளப்பியுள்ளார்.
இளங்கோவனின் பேச்சு காங்கிரஸார் மத்தியிலும், கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங் பிரமுகரை வெளுத்த இளங்கோவன் மகன் :
இதற்கிடையே ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் தென்றல் மணியை,மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஈ.வே.ரா. திருமகனும்அவரது ஆதரவாளர்களும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதாக புகார்எழுந்துள்ளது.
ஈரோட்டில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.இதில் இளங்கோவன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்தென்றல் மணி வந்தபோது அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்தக் கும்பல் தென்றல் மணியை சரமாரியாக அடித்து உதைத்து காயப்படுத்திவிட்டுச் சென்றது. படுகாயமடைந்த தென்றல் மணி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் குறித்து தென்றல் மணி கூறுகையில்,
மத்திய அமைச்சர் இளங்கோவனின் மகன் திருமகன், ஈரோடு நகர தலைவர் சந்துரு,ராஜேஷ் உள்ளிட்ட 10 பேர் என்னைக் கடத்திக் கொண்டு சென்றனர். ஒரு இடத்தில்அடைத்து வைத்து அடி அடியென்று அடித்தார்கள்.
டாக்டர் செல்லக்குமாரின் (இவரது ஆதரவாளர்களைத்தான் வாசன் ஆதரவாளர்கள்சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைத்து விரட்டிவிரட்டி வெளுத்து வாங்கினார்கள்) ஆதரவாளரான உனக்கு மாவட்ட தலைவர் பதவிவேண்டுமா?
அதற்காக மயூரா ஜெயக்குமாரை வரவேற்க வந்தாயா என்று கேட்டு திருமகனும்அவரது ஆதரவாளர்களும் என்னை சரமாரியாகத் தாக்கினர்.
தாக்குதலில் எனது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. வலது பக்க கண்ணும் வீங்கிவிட்டது. நான் மயங்கி விட்டேன். பின்னர் ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பிமருத்துவமனையில் வந்து சேர்ந்தேன் என்று கூறியுள்ளார் தென்றல் மணி.
ராகுல் வந்தா காங் தேறும்: வாசன்
இதற்கிடையே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க ராகுல் காந்தியை கூட்டிவந்து கிராமம் கிராமமாக கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய இணைஅமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவை தமிழக காங்கிரஸ் சேவாதளம் இன்றுகொண்டாடியது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாசன் கேக் வெட்டினார். பின்னர்அவர் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து மக்களுக்கு உதவுவதற்காக பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைத் தொடர்ந்துராகுல்காந்தியும் தமிழகத்திற்கு வந்தார்.
அவர் மனிதாபிமானம் மிக்க இளம் தலைவர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைபலப்படுத்த தொண்டர்கள் மக்களிடம் நெருங்கிப் பழக வேண்டும். கட்சிப் பணியும்,மக்கள் தொண்டும் இரு கண்களாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். அதற்கு நாம் கடுமையாகஉழைக்க வேண்டும். ராகுல் காந்தியை அடிக்கடி தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துகிராமம் கிராமமாக கூட்டிச் சென்றால் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்குஅதிகரிக்கும், நம்பிக்கை வளரும், கூடவே கட்சியும் வளரும்.
அதற்கான முயற்சிகளை தமிழக காங்கிரஸ் நிச்சயம் எடுக்கும் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications