ரூ. 10 லட்சம் கள்ள நோட்டு!: ஜனனிக்குபோலீஸ் வலைவீச்சு!!-வெளிநாட்டுக்கு தப்பினார்?
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கிலிருந்து விடுதலை ஆகியுள்ள நடராஜனின் தோழி ஜனனி மீதுகள்ள நோட்டு வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர். அவரிடமிருந்துகைப்பற்றப்பட்ட ரூ. 1.4 கோடி பணத்தில் ரூ. 10 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுஇருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
மதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜனனிக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும்இடையே அன்பு ஏற்பட்டுவிட, இதையடுத்து அக்காவிடம் சொல்லி கஞ்சா கேஸ்போட்டார் சசி.
![]() |
உண்மையில், நடராஜன் சில நாட்கள் ஜனனியின் வீட்டில் டேரா போட்டுவிட்டுகிளம்ப, இதை உளவுத் துறை சசியிடம் போட்டுக் கொடுக்க, ஜனனி மீது கஞ்சா கேஸ்பாய்ந்தது.
வீட்டிலேயே வைத்து ஜனனி, ரமீஜா, கார் டிரைவரை அமுக்கிய போலீசார், ஜனனிக்குஅவரது அன்புக்குரியவர் வாங்கித் தந்த சென்னை பங்களாவிலும போலீசார்சோதனை நடத்தினர்.
அங்கிருந்த பணம், நகைகளை கைப்பற்றிய போலீசார், நகைகளில் பெரும் பகுதியையும் பணத்தில் பெரும்பகுதியையும் தோழியிடம் பத்திரமாக சேர்பித்துவிட்டு வெறும் ரூ. 1.4 கோடியை மட்டும் கணக்கில் காட்டினர்.இந்த ஆபரேசனை சக்ஸஸ் புல்லாக முடித்துக் காட்டியவர் அன்றைய சென்னை கமிஷ்னர் விஜய்குமார்.
ஜனனியின் சென்னை மற்றும் மதுரை வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1.40கோடி பணமும், 30 கிலோ கஞ்சாவும் சிக்கியதாவும் போலீஸார் வழக்குப் போட்டனர்.
அன்புக்குரியவர் வாங்கித் தந்ததாகக் கூறப்படும் மிட்சுபிஸி லேன்சர் காரும் பறிமுதல்செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தியது தொடர்பாக மதுரை போதைப் பொருள் குற்றத் தடுப்புநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 3 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின்இறுதியில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் ஜனனி உள்ளிட்ட 3 பேரையும் நீதிபதி மாணிக்கம் விடுதலை செய்தார். மேலும்அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 கோடியே 40 லட்சத்து 18,000பணத்தில் 1.40 கோடியை கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவிடமும்,18,000பணத்தை ஜனனியிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
(தன்னிடம் இருந்த ரூ.1.4 கோடி பணம் கடம்பூர் ஜமீன்தார் ஜெகதீஷ் ராஜாவுடையதுஎன்று ஜனனி தெரிவித்திருந்தார்)
முன்னதாக ஜனனியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு கணக்கேஇல்லாததால் அதை மதுரை வருமான வரித்துறையினர் தங்களிடம் ஒப்படைக்கக்கோரியது.
இதையடுத்து அந்தப் பணத்தை போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.இதைத் தொடர்ந்து மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வங்கி ஒன்றில் பணத்தைடெபாசிட் செய்தது வருமான வரித்துறை.
இப்போது ஜனனி விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்பையடுத்துஇந்தப் பணத்தை ஜனனி, ஜமீன்தார் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
வங்கியில் டெபாசிட் செய்து வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமான வரித்துறையினர்திருப்பி எடுத்தனர். பணத்தை சரிபார்த்தபோது அதில் இருந்த ஆயிரம் ரூபாய்நோட்டுக் கட்டுக்கள் அனைத்தும் கள்ள நோட்டுக்களாக இருந்ததைப் பார்த்துஅதிர்ந்தனர்.
![]() |
இதையடுத்து சென்னை வருமான வரித்துறை ஆணையர், மதுரை மாநகர காவல்துறைஆணையருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமாரின் பரிசீலனைக்கு ஆணையர்அனுப்பி வைத்தார். ஜனனியிடம் கைப்பற்றப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டிருந்தபணத்தில் எப்படி கள்ள நோட்டுக்கள் வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.
இதுதொடர்பாக மதுரை கருப்பாயூரணி போலீஸார் தற்போது ஜனனி மீது கள்ளநோட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரைக் கைது செய்யவும்போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக இன்று காலை அன்பு நகரில் உள்ள ஜனனியின் வீட்டுக்குப் போலீஸார்சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. ஜனனி எஸ்கேப் ஆகிவிட்டார்.
போலீஸாரின் புதிய வழக்கை அறிந்த ஜனனி தலைமறைவாகி விட்டாதாகக்கூறப்படுகிறது. அவரை விரைவில் கைது செய்ய போலீஸார் தனிப்படைகள்அமைத்துள்ளனர்.
வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்?:
இதற்கிடையே ஜனனி வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
ஜனனியும், அவரது தாயார் ரமீஜாவும் மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது நாடகம்:
இந் நிலையில் ஜனனி மீதான இந்தப் புதிய வழக்கு போலீஸாரின் திட்டமிட்ட நாடகம்என கார் டிரைவர் சதீஷின் வழக்கறிஞர் கனகராஜ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட பணம் வங்கியில்தான் டெபாசிட்செய்யப்பட்டது. வங்கியில் உள்ள பணத்தை அப்படியே வைத்திருக்க மாட்டார்கள்.அந்தப் பணத்தை வங்கி சுற்றுக்கு விட்டிருக்கும். அந்தப் பணம் இந்தியா முழுவதும்போயிருக்கும்.
3 ஆண்டுகளாக இந்தப் பணத்துக்கு வட்டியும் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவுபெரிய தொகையை டெபாசிட் செய்யும்போது அதை சரி பார்த்திருக்க மாட்டார்களா?எனவே திடீரென கள்ள நோட்டு வந்ததாக கூறுவது விந்தையாக உள்ளது. இதில் ஏதோசதி நிடப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம் என்றார் கனகராஜ்.
ஆட்சி மாறியும் ஜனனியின் துயரத்திற்கு முடிவு ஏற்படாது போலத் தெரிகிறது.
கூடா நட்பு.. எப்போதும் டேஞ்சர்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications