கோவை: தண்டவாளத்தில் அறுந்து விழுந்தமின் கம்பி- பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோயம்புத்தூரை அடுத்த போத்தனூர் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பியை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது ரயில்வே ஊழியர் மின்சாரம் தாக்கிபடுகாயம் அடைந்தார்.

கோவை அருகே உள்ளது போத்தனூர். இந்த ரயில் நிலையம் வழியாக கோவைமற்றும் கேரளா வழியாக பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பையிலிருந்துகன்னியாகுமரிக்கும் போத்தனூர் வழியாகவே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

இந்த ரயில் தினமும் நள்ளிரவில் போத்தனூரை வந்தடையும். நேற்று நள்ளிரவு 12மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் போத்தனூர் அருகே நஞ்சுண்டா புரம் என்றஇடத்தில் வந்து கொண்டிருந்தது. ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்இருந்தனர்.

அப்போது இருகூர், கோவை பிரிவில் தண்டவாளம் பிரியும் இடத்தில், ரயில் கடந்துசென்றபோது திடீரென உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தது. இதனால்மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு ரயில் நின்றது.

தகவல் அறிந்ததும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரக்கம்பி அறுந்து விழுந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மின்சாரவினியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் பல ஆங்காங்கேநிறுத்தப்பட்டன. திருச்சி-எர்ணாகுளம், திருவனந்தபுரம்-ஹெளரா,எர்ணாகுளம்-திருச்சி ரயில்கள் போத்தனூர், கோவை மற்றும் வாளையாரில்நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நள்ளிரவில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.

அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது விஜயன்என்ற ரயில்வே ஊழியர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குமுதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குமாற்றினர்.

ஊழியர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக மின்இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அறுந்து கிடந்தகம்பிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது.

இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு மின்சாரவினியோகம் தொடங்கியது. அதன் பின்னரே அந்தப் பாதையில் ரயில்கள் மீண்டும்இயக்கப்பட்டன. இந்தப் பாதையில் ரயில்கள் பெரும்பாலும் மின்சார என்ஜின்களைக்கொண்டே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு, ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்ட பலரயில்களும் கிளம்பிச் சென்றன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரயில்கள்ஆங்காங்கே நின்றதால் பயணிகள் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய போலீஸார்ரயில் பெட்டிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இரவு முழுவதும் ரயில் பயணிகள்பதைபதைப்புடன் பொழுதைக் கழித்தனர்.

மும்பை -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற பின்னர்தான் மின்சாரக் கம்பிஅறுந்து விழுந்துள்ளது. ரயில் போவதற்கு முன்பு கம்பி விழுந்திருந்தால் பெரும்உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+