எச்1பி: அமெரிக்காவின் புதிய சட்டம்-பீதியில் ஆஸி

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்:

அமெரிக்க அரசின் புதிய குடியேற்ற சட்டத்தால் ஆஸ்திரேலியா கடுமையாகபாதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய நாட்டு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்கில்டு லேபர் எனப்படும் பல்துறை தொழில் திறமை வாய்ந்த நிபுணர்கள்,பணியாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் அமெரிக்க செனட் சபையில்சமீபத்தில் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, ஆண்டு தோறும் வழங்கும் எச் 1-பி விசாக்களின் எண்ணிக்கையைஇப்போதைய 65,000ல் இருந்து 1,15,000 ஆக உயர்த்த அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.

மொத்தத்தில் அமெரிக்காவுக்குப் பணி புரிய வருவோருக்கு அளிக்கப்படும்விசாக்களின் எண்ணிக்கையை (எச்1பி உள்பட) 1.4 லட்சத்தில் இருந்து 6.5 லட்சமாகஉயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பாதகமாக அமையும் என ஆஸ்திரேலிய நாட்டுவேலை வாய்ப்பு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைஆஸ்திரேலியா இழக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா, கீழ் சபையானகாங்கிரஸிலும் நிறைவேற்றப்பட்டால், எச்1 பி விசா பெறுவோரின் எண்ணிக்கைகிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துவிடும்.

இது ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடிச் செல்வோரை அமெரிக்காவுக்குத் திருப்பிவிட்டு விடும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசிய நாட்டுப்பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும் என்றும் அவர்கள்அமெரிக்காவுக்கு செல்லத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திறமை வாய்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு விலகத் தொடங்கினால்அது ஆஸ்திரேலிய நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு இருக்கும்என்றும் கூறப்படுகிறது.

சீனாவின் ஆதிக்கத்தால், ஏற்கனவே திறம் வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறைஆஸ்திரேலிய நாட்டு பொருளாதாரத்தை திணறடித்து வருகிறது. தற்போதையஅமெரிக்கச் சட்டத்தால் அது மேலும் சிக்கிக் தவிக்கும் நிலை உருவாகும் என்றுஅஞ்சப்படுகிறது.

தற்போதைய அமெரிக்க சட்டத் திருத்தத்தின் மூலம் எச்1 பி விசாக்கள் அதிக அளவில்கொடுக்கப்படுவதோடு, வெளிநாட்டு மாணவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில்படிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர் அளவிலிருந்தே அதிக அளவில் பல வெளிநாட்டினர் குறிப்பாகஇந்தியர்கள், அமெரிக்காவுக்கு பெரும் எண்ணிக்கையில் படையெடுக்கும் வாய்ப்புஉருவாகியுள்ளது.

அமெரிக்காவின் புதிய குடியேற்ற சட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும்பாதிப்புகள் குறித்து மெல்போர்னில் உள்ள மக்கள் தொகை மற்றும் நகர்ப்புற ஆய்வுமைய இயக்குனர் பாப் பிர்ரல் கூறுகையில்,

திறமை வாய்ந்த வேலையாட்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பற்றாக்குறைஉள்ளது. திறன் வாய்ந்த தொழிலாளர்களைக் கவருவதில் அமெரிக்காவுக்கும்,ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய அமெரிக்கச் சட்டத்தின் மூலம் அந்நாட்டின் கை ஓங்கும் நிலைஏற்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்கு நல்லதல்ல என்று தி ஏஜ் செய்தித் தாளுக்குஅளித்துள்ள பேட்டியில் பிர்ரல் எச்சரித்துள்ளார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த திறன் வாய்ந்ததொழிலாளர்களின் விருப்ப நாடாக ஆஸ்திரேலியா இருந்த போதிலும் அதைஉடைக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அடுத்து கனடாவும் இதுபோலஇறங்கலாம்.

அப்போது ஆஸ்திரேலியாவின் நிலை மேலும் சிக்கலாகும் என்றும் அவர் கூறுகிறார்.

வழக்கமாக இந்தியாவிலிருந்துதான் அதிக அளவில் சாப்ட்வேர் நிபுணர்கள் உள்ளிடிடதிறன் வாய்ந்த தொழிலாளர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குஇடம் பெயறுகிறார்கள்.

ஆனால் இப்போது இந்தியாவிலேயே சிறந்த வேலை வாய்ப்புகள், ஊதியம்போன்றவை கிடைக்க ஆரம்பித்திருப்பதால் இரு நாடுகளுமே நல்ல தொழிலாளர்கள்கிடைக்காமல் திணறும் நிலை விரைவிலேயே ஏற்படும் என அமெரிக்க நிபுணர்ஒருவரும் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் இப்போது சூழ்நிலைகள் மாறத் தொடங்கியுள்ளன. இந்தியாவை விட்டுவெளியே போனால்தான் நல்ல வேலை என்ற நிலையில் பெரிய அளவில் மாற்றம்ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெக்னாலஜி துறையில் வரலாறு காணாதவளர்ச்சியை இந்தியா அடைந்து வருகிறது.

இதை இப்படியே விட்டால் தங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால்தான் அதை மாற்றதனது நிலையிலிருந்து அமெரிக்க அரசு இறங்கி வந்து புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாகவும் அந்த அமெரிக்க நிபுணர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+