சாப்ட்வேர்: தமிழகத்தின் ஒசூர் பிளான்!
-அறிவழகன் - ஏ.கே. கான்
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள தொழில் நகரமான ஓசூரை, பெங்களுருக்குஇணையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நகராக உருவாக்கஒளிரும் ஓசூர் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில் நகரான ஓசூர், பெங்களூருக்கு இணையான தட்பவெப்ப நிலையைக்கொண்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் அங்கு உள்ளன.பெங்களூரில் உள்ள அதே தட்பவெப்ப நிலையுடன் ஓசூர் இருப்பதால், இந்நகருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இழுக்க முடியும் என்ற நம்பிக்கைபல காலமாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல், இடப் பற்றாக்குறை, மிக பயங்கரமான ரியல் எஸ்டேட்விலை, மிக அதிகமான வாடகைக் கட்டணம், மின் கட்டணத்தால் பெங்களூர் தனதுமுந்தைய ஈர்ப்பை இழந்து வருகிறது.
இதைப் பயன்படுத்தி ஹைதராபாத், புனே ஆகிய நகர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களைதங்கள் பக்கமாக இழுத்து வருகின்றன. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிபெங்களூருக்கே வந்து முக்கியஸ்தர்களை சந்தித்து தனது மாநிலத்துக்கு முக்கியசாப்ட்வேர் நிறுவனங்களை கையோடு இழுத்துச் சென்று விடுகிறார்.
ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திப்பது என்பது சசிகலாவுக்குமட்டுமே சாத்தியம் என்ற நிலை இருந்ததால், தமிழகம் இந்த விஷயத்தில் பின்தங்கியது.
சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள், கேரளா மாதிரி எதற்கெடுத்தாலும் கொடி பிடிக்காததொழிலாளர்கள் இருப்பதால் தமிழகத்தை முதலீட்டாளர்கள் வெகுவாகவேவிரும்பினாலும், கட்சிக்கு இவ்வளவு நிதி, எங்களுக்கு இவ்வளவு நிதி என மணல்காண்ட்ராக்டர்களிடம் கேட்பது மாதிரி இந்த நிறுவனங்களிடமும் கமிஷன் கேட்டகொடுமையெல்லாம் நடந்தது.
இதனால் ஹைதராபாத்தும், புனேவும் பெங்களூரில் இருந்து நிறுவனங்களை இழுத்துச்சென்று கொண்டிருந்த தமிழ்நாடு வேடிக்கை மட்டுமே பார்த்தது.
இப்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கும்வேலைவாய்ப்புக்களை மனதில் வைத்து அந்த நிறுவனங்களை தமிழகத்துக்கு இழுக்கதீவிரம் காட்டி வருகிறது புதிய அரசு.
மத்திய அமைச்சர் தயாநிதியின் உதவியைக் கொண்டு சாப்ட்வேர் நிறுவனங்களைக்கவர முயன்று வருகிறது திமுக அரசு.
தனது வயதையும் மீறி முதல்வர் கருணாநிதி பெங்களூரின் இன்போசிஸ், விப்ரோநிறுவனங்களுக்கு நேரில் சென்று தமிழகத்தில் முதலீட்டை அதிகரிக்குமாறு கோரியதுவரவேற்கத்தக்கது.
ஹைதராபாத்தில் தோட்டத்தில் ஓய்வெடுக்க பலமுறை தனி பிளைட்டில் போயுள்ளபோன ஜெயலலிதா, ஒரு தடவையாவது ஏதாவது ஒரு நிறுவனத்தைப் போய்பார்த்ததாகவோ, முதலீடு கோரியதாகவோ நினைவில்லை.
இந் நிலையில் புதிதாக ஒளிரும் ஓசூர் என்ற திட்டத்தை தமிழக அரசுஉருவாக்கியுள்ளது. அதன்படி ஓசூர் நகரின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்மேம்படுத்தப்படவுள்ளன. புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மின்சாரம், குடிநீர்உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.
அமைச்சர் தயாநிதி மாறனின் யோசனைப்படி உருவான இந்தத் திட்டத்துக்கு எத்தனைகோடிகள் தேவைப்பட்டாலும் அதை ஒதுக்கிட உத்தரவிட்டுள்ளாராம் கருணாநிதி.
திட்டத்தை அறிவித்தோடு இல்லாமல் அதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்சந்தோஷ்பாபு மூலம் தொடங்கியும் விட்டது தமிழக அரசு.
நிகழ்ச்சியில் சந்தோஷ் பாபு பேசுகையில், தனியார் மற்றும் அரசு கூட்டு முயற்சியில்இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஓசூர் நகரின் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மேலும் பல நிறுவனங்கள் தங்களது பிரிவுகளைஅமைக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேலும் ஓசூரில் உள்ள குடிநீர்நிலைகளான ஏரிகள், குளங்களும் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்படும்.
டிவிஎஸ் நிறுவனம் புகழ்பெற்ற சந்திராம்பிகை ஏரியை தூர்வாரும் பணியைமேற்கொள்ள முன் வந்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஓசூர் நகரம் அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய தொழில் நகரமாக உருவெடுக்கும் என்றார் சந்தோஷ்பாபு.
இதைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைஒசூருக்கு இழுக்கும் வேலைகளை தமிழகம் ஆரம்பிக்கவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications