இலங்கை-கருணாநிதியுடன் பேச பிரதமரின் பிரதிநிதிவருகை-ஜெயாவும் திடீர் கோரிக்கை
சென்னை - டெல்லி:
இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசுநேரில் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுகதோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில்பேசினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்து விளக்கிய அவர், மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.அப்போது, இந்தப் பிரச்சனையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விரிவாகவிவாதிக்க தனது சார்பில் பிரதிநிதி ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாகபிரதமர் தெரிவித்தார். மேலும் இலங்கையில் அமைதி ஏற்பட அனைத்துநடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
(இலங்கை விஷயத்தில் குட்டையைக் குழப்பிய ஜே.என். தீட்சித் மாதிரி யாரையாவதுஒருவரை கருணாநிதியிடம் பிரதமர் அனுப்பாமல் இருந்தால் சரி)
முன்னதாக நேற்று மாலை கருணாநிதி, தலைமையில் அறிவாலயத்தில் நடந்தகூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் டி.சுதர்சனம், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியகம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்டி.கே.ரங்கராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன்உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதில், இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை அரசும், போராளிகளும் மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. அப்பாவிமக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழகத்துக்கு அகதிகள்வருகையும் அதிகரித்துள்ளது.
இந்தியா, இலங்கை வாழ் மக்களின் மனதைப் பெரிதும் பாதிக்கும் அளவுக்குஇச்சம்பவங்கள் அமைந்துள்ளன.
இப்பிரச்சினை ஏற்கனவே விரும்பத்தகாத பல விபரீத, வேதனையானநிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்ததை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கான வழி வகைகளைக் காண இந்திய அரசுஆவண செய்திட வேண்டும்.
தமிழக மீனவர்களுக்க இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து இழைக்கப்படும்கொடுமைகள் நிறுத்தப்படவும், அந்த மீனவர்களுக்கு உயிர், உடைமை, உரிமைக்குஉத்தரவாதம் அளிக்கப்படவும், இந்தியா, இலங்கை அரசுகள் தேவையானநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், மத்திய அரசுஇப்பிரச்சினையில் இதுவரை எடுத்து வரும் நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்போட்டுள்ளோம்.
அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். என்னநடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். இத்தீர்மானம் பிரதமருக்கு உடனேஅனுப்பப்படும். நானும் அவருடன் தொலைபேசியில் பேசுவேன்.
அகதிகள் நிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை நேரில் கண்டறிந்து வரஅமைச்சர்கள் தங்கவேலன், பெரியகருப்பன் ஆகியோரை அனுப்பினேன்.அவர்களும் சென்று வந்துள்ளனர். அதற்கான அறிக்கையுடன் காத்துள்ளனர்.
இன்று நடந்தது திமுக தோழமைக் கட்சிகள் கூட்டம் அல்ல. அனைத்துக் கட்சிக்கூட்டம்தான். முதல் கட்டமாக ஏழு கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேசிகையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
வேலூர் சிறையில் நளினியும், முருகனும் உண்ணாவிரதம் இருப்பதற்கும், தமிழகஅரசுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. எனவே அதுகுறித்து நான் கருத்துக் கூறவிரும்பவில்லை.
தமிழக மீனவர்களைத் தாக்குவதற்கு இலங்கை ராணுவம் ஏதேனும் ஒரு காரணத்தைச்சொல்லிக் கொண்டிருக்கும். அது வழக்கமாகி விட்டது. அதையெல்லாம் நிறுத்தநடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் கருணாநிதி.
மத்திய அரசு தலையிட ஜெ. கோரிக்கை:
இதற்கிடையே இலங்கை இனப் பிரச்சினையில் அமைதித் தீர்வு ஏற்பட உடனடியாகமத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை இலங்கை விஷயத்தில் முதல்வர் கருணாநிதியைப் போலவே மிக ஆழ்ந்தமெளனத்தில் இருந்த ஜெயலலிதா, நேற்று திமுக கூட்டணி தீர்மானம் போட்டதும்இன்று திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேநடந்து வரும் மோதலால் அப்பாவித் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏராளமான தமிழர்கள் அகதிகளாக வந்து கொண்டிருப்பது தமிழக மக்களைவேதனைக்குள்ளாக்கி உள்ளது.
இலங்கையில், அமைதி நிலவ இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக செய்யவேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
முருகன், நளினி உண்ணாவிரதம் வாபஸ்:
இதற்கிடையே மகள் ஆரித்ரா தங்களை சந்திக்க இலங்கையிலிருந்து தமிழகம் வர விசா வழங்க வலியுறுத்தி வேலூர் சிறையில் காலவரையற்றஉண்ணாவிரதம் இருந்து வந்த நளினியும், முருகனும் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகனும், ஆயுள் தண்டனை பெற்ற நளினியும் வேலூர் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மகள் ஆரித்ரா இலங்கையில் முருகனின் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த ஆரித்ரா வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை சந்தித்தார். பின்னர் இலங்கை திரும்பி விட்டார். ஆரித்ராதற்போது 10வது வகுப்பை முடித்துள்ளார். மேல் படிப்பை தமிழகத்தில் படிக்க விரும்புகிறார்.
இதற்காக தமிழகம் வர விரும்பி, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஆரித்ரா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விசா வழங்குவதில் இந்தியத் தூதரகம் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தங்களது மகள் தமிழகத்தில் படிக்க அனுமதிக்கக் கோரியும், விசா வழங்கக் கோரியும் நளினியும், முருகனும் சிறைக்குள் உண்ணாவிரதப்போராட்டத்ததைத் தொடங்கினர்.
கடந்த 6 நாட்களாக இவர்களது போராட்டம் நடந்து வந்தது. இந் நிலையில் ஆரித்ராவின் விசா விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக கொழும்பிலிருந்துதகவல் வந்ததைத் தொடர்ந்து இருவரும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
ஆரித்ரா வேலூர் சிறையில்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications