வக்கீல் கொலையிலும் கள்ளக் காதல்: அடித்துகொன்ற மனைவி-திட்டம் போட்டு தந்த காதலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே மாதவரத்தில் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு, அவரதுமனைவியின் கள்ளக் காதலே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கணவரை தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயங்கச் செய்து பின்னர்தலையணையால் அமுக்கியும், இரும்புக் குழாயால் அடித்தும் பயங்கரமாக கொலைசெய்த அவரது மனைவியையும், திட்டம் தீட்டிக் கொடுத்த கள்ளக் காதலனையும்போலீஸார் கைது செய்துள்ளனர்.

Arulnathan
கொலை செய்யப்பட்ட அருள்நாதன்

சென்னை மாதவரம் அஜீஸ் நகரில் வசித்து வந்தவர் அருள்நாதன். கிருஷ்ணகிரியைச்சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். முகப்பேரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் திட்டமேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மேரி சேவியர் என்ற மனைவியும், அந்தோணி இருதயராஜ் என்ற மகனும்,ஏஞ்சலின் மேரி என்ற மகளும் உள்ளனர். மேரி சேவியர் மாதவரம் பஸ் டிப்போஅருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் தனதுகணவர் அருள் நாதனை கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டதாக மேரி சேவியர் போலீசாருக்குத் தகவல் தந்தார்.

கணவர் கொலை செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என்றும், பக்கத்து அறையில்படுத்து தூங்கியதால் கொள்ளையர்கள் வந்தது, தாக்கியது தொடர்பாக எந்த சத்தமும்கேட்கவில்லை என்றும் மேரி கூறினார்.

Mary
கதறி அழுது, ஆக்டிங் போட்ட மேரி (நைட்டியில் இருப்பவர்)

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த நகை,பணம் திருடப்பட்டதாக மேரி சேவியர் போலீஸில் கூறினார். வீட்டைசோதனையிட்டுப் பார்த்தபோது, போலீஸாருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து அருள்நாதன் மற்றும் மேரியின் செல்போன்களைப் போலீஸார் பறிமுதல்செய்து விசாரணை நடத்தினர்.

மேரியின் செல்போனிலிருந்து கொலை நடந்த இரவில் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குபலமுறை போன் செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், வீட்டின் முன் கதவுஉடைக்கப்படாததும், திறந்தே இருந்ததும் போலீஸாருக்கு சந்தேகத்தைவலுப்படுத்தியது.

இதையடுத்து மேரியை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகின. குற்றவாளி வேறு யாரும் இல்லை, மேரியே தான் என்றவிவரமும் தெரிய வந்தது.

அருள்நாதன் குடியிருந்த வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி வசிப்பவர் ஆரோக்கியதாஸ்.இவர் அருள்நாதனின் அண்ணன் மகன்.

Mary
மகனுடன் மேரி

கிருஷ்ணகிரியில் கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்த தாஸை அருள்நாதன்தான்சென்னைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் தங்க வைத்திருந்தார். அவருக்காகஅலங்கார மீன் விற்கும் நிலையம் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார்.

அருள்நாதன் வீட்டில் தங்கியிருக்கும் போது தாஸுக்கும், மேரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அருள் நாதன் இல்லாத நேரங்களில் இருவரும்சந்தோஷமாக இருந்துள்ளனர்.

ஏற்கனவே அருள்நாதனுடன் குடும்பம் நடத்தப் பிடிக்காமல்தான் வாழ்ந்து வந்தாராம்மேரி. அவரது சோகத்திற்கு வடிகாலாக வந்து அமைந்தார் தாஸ்.

கள்ளத் தொடர்பு குறித்து அருள்நாதனுக்குத் தெரிய வந்தபோது, மேரியை அவர்கடுமையாக கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து தாஸ், அதே தெருவில் வேறுவீட்டுக்கு வாடைக்கு குடியேறினார்.

கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதை விரும்பாத மேரி அவரை என்னசெய்வது என்று ஆரோக்கியதாஸிடம் யோசனை கேட்டுள்ளார். அருள்நாதானைகொலை செய்து விடுமாறு தாஸ் யோசனை கூறியுள்ளார்.

Doss
கள்ளக் காதலன் தாஸ்

விஷத்தன்மை உள்ள தூக்க மாத்திரைகளை வாங்கி தருகிறேன். அதை சாப்பாட்டில்கலந்து அருள்நாதனிடம் கொடுத்து விடு. அவர் தூக்கத்திலேயே இறந்து விடுவார்.யாருக்கும் சந்தேகம் வராது என்று யோசனை கூறியுள்ளார் தாஸ்.

இதன்படி நேற்று முன்தினம் இரவு குடும்பத்தோடு அனைவரும் மாடியில் காற்றுவாங்கினர். அதன் பின்னர் இரவு சாப்பாட்டை கணவருக்குக் கொடுத்துள்ளார் மேரி.அதில் தாஸ் கொடுத்த 25 தூக்க மாத்திரைகளை நன்கு தூளாக்கி கலந்திருந்தார்.சாப்பாடு கசப்பாக இருந்ததைப் பார்த்த அருள்நாதன் பாதி சாப்பாட்டை அப்படியேவைத்து விட்டார்.

பின்னர் சிறிது நேரம் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அந்த இடைப்பட்டநேரத்தில் தாஸுக்குப் போன் செய்த மேரி, பாதி சாப்பாட்டை மட்டுமே அருள்நாதன்சாப்பிட்டதாக கூறியுள்ளார். அதற்கு தாஸ், பரவாயில்லை இறந்து விடுவார் என்றுகூறியுள்ளார்.

இதன் பின்னர் படுக்கை அறையில் மேரியும், அவரது மகளும் படுத்துக் கொண்டனர்.அருள்நாதனும், மகனும் நடு அறையில் படுத்துத் தூங்கினர். நள்ளிரவுக்கு மேல்அருள்நாதன் இறந்திருப்பாரா என்ற சந்தேகம் மேரிக்கு வந்தது.

இதையடுத்து கணவரைப் போய் பார்த்துள்ளார். அவர் இறக்கமால் இருந்ததுதெரிந்தது. இதையடுத்து மீண்டும் தாஸுக்குப் போன் செய்த மேரி, கணவர் இன்னும்இறக்கவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார்.

Mary
மகனுடன் மேரி

அப்போது, அருள்நாதனை தலையணையால் முகத்தை அழுத்தியும், இரும்புக்குழாயால் அடித்தும் கொல்லுமாறும், வீட்டில் கொள்ளை நடந்தது போல செட்-அப்செய்யுமாறும் யோசனை தந்துள்ளார் தாஸ்.

அவர் சொன்னது போலவே அரைகுறை மயக்கத்தில் இருந்த கணவரைதலையணையை வைத்து அழுத்துக் கொலை செய்துள்ளார் மேரி. பின்னர் இரும்புக்கம்பியாலும் அடித்துக் கொலை செய்தார் மேரி.

தந்தையை அம்மா கொலை செய்ததை மகன் இருதயராஜ் பார்த்துவிட்டான். ஆனால்,அவனிடம் கொள்ளையர்கள் வந்து போனதாகவே சொல்ல வேண்டும் என்று மேரிமிரட்டியுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுவனும் பொய் சொல்ல சம்மதித்தான்.

இதையடுத்து, அதிகாலையில் அருள்நாதன் இறந்த செய்தியை வெளியே பரப்பினார்மேரி.

போலீஸார் முதலில் மேரி மீது சந்தேகம் கொள்ளவில்லை. மீண்டும் வட நாட்டுக்கொள்ளையர்கள் கைவரிசையாக இது இருக்கக் கூடும் என நினைத்தனர்.

ஆனால் மேரி முன்னுக்குப் பின் முரணாக பேசியது அவர்களுக்கு சந்தேகத்தைக்கொடுத்தது. மேலும், வீட்டின் முன் கதவு உடைக்கப்படாமல் திறந்திருந்ததும்அவர்களுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இறுதியில் மேரிதான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.

மேரியைக் காட்டிக் கொடுத்தது வேறு யாருமல்ல அவரது மகன் இருதயராஜ்தான்.

சிறுவன் இருதயராஜிடம் போலீஸார் தனியே விசாரித்தபோது, நடந்த உண்மையைஅப்படியே கூறி விட்டான்.

இதைத் தொடர்ந்தே மேரி குற்றவாளி என்பது நிரூபணமானது. கைது செய்யப்பட்டமேரி காவல் நிலையத்தில் இருந்தபோது, சிறுவன் இருதயராஜும், அவனது தங்கைஏஞ்சலின் மேரியும் தாயைக் கட்டிப்பிடித்து அழுதபடி, எப்பம்மா வீட்டுக்கு வருவீங்கஎன்று கதறி அழுதபடி கேட்டது போலீஸாரையே உலுக்கிவிட்டது.

கொலை நடந்த 12 மணி நேரத்தில் கொலையாளியான மேரியையும், திட்டம்போட்டுத் தந்த தாஸையும் சாட்சியத்துடன் கைது செய்துள்ளது போலீஸ்.

இதற்காக போலீஸ் தனிப்படைக்கு மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண்பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு பேர் கள்ளக் காதல் விவகாரத்தில்மனைவிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பம்மல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா தனது கணவரோடு மூணாறுக்கு தேனிலவுக்காகசென்றிருந்தார். அப்போது அங்கு வைத்து தனது கணவரை ஸ்ரீவித்யா தனது கள்ளக்காதலரோடு சேர்ந்து தீர்த்துக் கட்டினார்.

இந்த அதிர்ச்சிகரமான செய்தியிலிருந்தே மக்கள் மீளாத நிலையில் மாதவரத்தில்வழக்கறிஞர் அருள்நாதனும் தனது மனைவி மற்றும் கள்ளக் காதலனால் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+