ரூ. 30000 கோடி முதலீட்டை இழுத்த தமிழகம்
சென்னை:
அன்னிய நேரடி முதலீடு பெறுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளதாக தமிழக தகவல்தொழில்நுட்ப செயலர் சி.சந்திரமெளலி தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,தகவல் தொழில்நுட்பத் துறைக்காக சென்னையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழக அரசு நிலத்தைகையகப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு கம்பெனி உருவாகி வருகிறது. சென்னையில் தான் அதிக அளவில்நிறுவனங்கள் கால் பதிக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு குறுகிய காலத்தில் நிலம் அளிக்க வேண்டியதுஅவசியம்.
அன்னிய நேரடி முதலீடு பெறுவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. தற்போது ரூ. 30,600 கோடிமதிப்புள்ள 2,700 திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.
இது நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டில் 9.1 சதவீதம் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சிறந்ததொழிலாளர்கள் கிடைக்கின்றனர். ஊதியமும் மற்ற நகர்களோடு ஒப்பிடுகையில் குறைவு.
சராசரியாக ஒரு வாரத்தில் சென்னை ஊழியர் 48 மணி நேரம் உழைக்கிறார். சீன ஊழியர்கள் 44 மணி நேரம்உழைக்கிறார்.
சென்னை தொழிலாளரின் (சாப்ட்வேர் துறையில் அல்ல, பொதுவானக) சராசரி சம்பளம் ரூ. 3,015. கொஞ்சம்நுணுக்கமான பணியில் இருப்பவர்களுக்கு ரூ.4,005 முதல் ரூ. 5,985 வரை சம்பளம் கிடைக்கிறது.
ஆனால் சீனாவில் இது ரூ. 9,990 முதல் ரூ. 25,020 வரை உள்ளது. பொது மேலாளர்கள் போன்ற உயர்அதிகாரிகள் சராசரி சம்பளம் சென்னையில் ரூ. 59,985 முதல் ரூ.64,980 வரை. அதுவே சீனாவில் ரூ. 75,015முதல் ரூ. 99,990 ஆக உள்ளது என்றார்.
சென்னையில் நோக்கியா மையம்:
இதற்கிடையே சர்வதேச நெட்வொர்க் தீர்வு மையத்தை சென்னையில் நோக்கியா நிறுவனம் தொடங்கியுள்ளது.உலகம் முழுவதும் உள்ள தனது மையங்களை நிர்வகிக்கும் பணியை சென்னை மையத்தில் அது அடுத்த மாதம்தொடங்குகிறது.
மேலும், ஹட்ச் தொலைபேசியை நடத்தும் நிறுவனமான ஹட்சிசன் எஸ்ஸாரின் 19 நெட்வொர்க் மண்டலங்களைநோக்கியா பராமரிக்கவுள்ளது. இதற்காக நோக்கியா, ஹட்சிசன் இடையே ரூ.100 கோடிக்கு ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசிக் கருவி வர்த்தகத்தில் மற்றொரு மைல் கல்லாக சீமன்ஸ் நிறுவனத்தை நோக்கியா வாங்கிவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் தொலைபேசி கருவி வர்த்தகத்தில் ரூ. 89,550 கோடி வருவாயுடன் மிகப் பெரிய நிறுவனம் என்றநிலைக்கு நோக்கியா முன்னேறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications