காக்னிசன்ட் நிறுவனத்தில் 572 தமிழக மாணவர்கள்தேர்வு: 3ம் ஆண்டு படிக்கும்போதே வேலை ரெடி
சென்னை:
3ம் ஆண்டு பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் காக்னிசன்ட் நிறுவனம் நடத்தியவேலை வாய்ப்பு முகாமில் 572 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலை வாய்ப்புக்கான உத்தரவுகளைப்பெற்றனர்.
அண்ணா பல்கலைக் கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஜடிஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு காக்னிசன்ட் நிறுவனம் நடத்திய வேலை வாய்ப்புமுகாமில் 1,600 பேர் கலந்து கொண்டனர். அதில் 504 பேர் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த ஆண்டும் கடந்த 2 நட்களாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 3ம் ஆண்டு படிக்கும் 1,660பொறியியல் மாணவர்கள் எழுத்து தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 1,018 பேர் நேர் காணலுக்கு தேர்வாயினர்.
நேற்று நடந்த நேர் காணலுக்குப் பின் மாலையில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்வெளியிடப்பட்டது. இதில் 572 பேர் தேர்வு செய்யப்பட்டதாக காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்தது.
தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் டி.விஸ்வநாதன்,காக்னிசன்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடையே துணை வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில்,
பொறியியல் பட்டப்படிப்பில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் எடுத்து இருந்தால்வோலை வாய்ப்பு வழங்கப்படும் என காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்ததது. அதன்படி இந்த ஆண்டு 572 பேர்தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பாக்கி உள்ள ஆண்டுக்கானபாடங்களை படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.
அதிலும் 60 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் வேலை உறுதியாக வழங்கப்படும். அத்துடன் காக்னிசன்ட்நிறுவனத்தில் உள்ள தொழில்கள் தொடர்பாக பயிற்சிகளும் இங்கு உங்களுக்கு வழங்கப்படும். எனவே இந்தவாய்ப்பை நழுவ விடாமல் படியுங்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications