ஜனனி வழக்கு சிபிஐக்கு மாற்றம்?
மதுரை:
ஜனனி மீதான கள்ள நோட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாக தெரிகிறது.
கஞ்சா கடத்தியதாக கூறி கடந்த 2003ம் ஆண்டு ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார்டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில்தான் இந்தவழக்கிலிருந்து விடுதலை ஆனார் ஜனனி.
இந் நிலையில் ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டிருந்தரூ. 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்தில் ரூ. 10 லட்சம் அளவுக்குகள்ள நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில், தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வழக்கை சிபிஐவசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
ஜனனிக்கு பணம் தந்தவர்களில் பல முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால்இதை சிபிஐ வசம் ஒப்படைத்தால் பல திடுக் விவரங்கள் வெளியில் வரும் எனதமிழக அரசு நினைக்கிறது.
இதற்கிடையே ஜனனிக்கு இப்பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்பட்ட ஜமீன்தார்ஜெகதீஷ் ராஜாவும் தலைமறைவாகி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தை ராஜாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரைபோதைப் பொருள் கடத்தல் குற்றத் தடுப்பு நீதிமன்றம் தனது உத்தரவில்தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
![]() |
ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு:
இந் நிலையில் கள்ள நோட்டு வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜனனியும் அவரது தாயார்ரமீஜாவும் மனு செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
அந்த மனு இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவ அய்யப்பன், பதில் மனு தாக்கல் செய்யஅவகாசம் கேட்டார். இதையடுத்து விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துநீதிபதி உத்தரவிட்டார்.
வீட்டுக்கு வந்து மாட்டிய ஜனனி:
இதற்கிடையே முக்கிய பிரமுகரின் உதவியோடு தலைமறைவாக இருந்த ஜனனியும்,ரமீஜாவும் நேற்று நள்ளிரவில் மதுரை அன்பு நகரில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்தனர்.
இரவு 11.45 மணியளவில் வீட்டுக்கு காரில் வந்த அவர்கள் வீட்டுக்கு பின்பக்கமாகசென்று சில சூட்கேஸ்களில் எதையோ வைத்து அமுக்கிக் கொண்டு காரில் ஏறிஅமர்ந்தனர்.
ஜனனியின் வீட்டை 24 மணி நேரமும் கண்காணித்து வந்த உளவுப் பிரிவினர் தகவல்கொடுத்ததையடுத்து கருப்பாயூரணி போலீசார் விரைந்து வந்து காரை சூழ்ந்துகொண்டனர்.
ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் நீங்கள் எங்கே தப்பி ஓடப் பார்க்கிறீர்கள்என்று போலீசார் கேட்டதற்கு, உறவினர் வீட்டுக்குச் செல்கிறோம் என்றனர். ஆனால்,அதை போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பிவைத்தனர்.
இந் நிலையில் இன்று காலை ஜனனிக்கு காய்ச்சல் இருப்பதாகக் கூறி அவரைஅழைத்துக் கொண்டு அவரது தாயார் ரமீஜா மேலூர் சாலையில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஜனனியை அட்மிட் செய்து கொள்ளும்படிரமீஜா கோரியதை மருத்துவமனை ஏற்கவில்லை. இதையடுத்து வீட்டுக்கே திரும்பிவந்துவிட்டனர்.
முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளதால், சட்டப்படிஇப்போது அவர்களைக் கைது செய்ய முடியாது.
ஆனாலும் அவர்கள் தப்பிவிடாமல் தடுக்க அப்பகுதியில் சாதாரண உடையில்போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனனி விஷயத்தில் அவருக்கு மிக வேண்டிய முக்கியப் பிரமுகரையும் சிக்கலில்மாட்டிவிட முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications