கச்சத்தீவை மீட்க மீனவர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்ககச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீண்டும் மீட்பது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்றுதேசிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் ஆண்டன் கோமஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கச்சத்தீவை இலங்கைக்கு நாம்தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல் இன்று வரை தமிழக மீனவர்கள்சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. இதுதவிர பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகள், மீன் பிடிவலைகள்,மீன்களையும் இலங்கை கடற்படை சூறையாடியுள்ளது.

இந்த அவல நிலையைப் போக்க உடனடியாக கச்சத்தீவை நாம் மீட்க வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளிைல் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிசட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தர். தற்போது இந்தக் கோரிக்கையை மத்தியஅரசிடம் வலுவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போதும், கொலை செய்யும்போதும்மத்திய, மாநில அரசுகள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

நமது உரிமையை நிலை நாட்ட முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர். தமிழகமீனவர்களை சுடக் கூடாது என்று இலங்கை கடற்படைக்கு இந்தியா தெள்ளத்தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவிக்க வேண்டும்.

வெளிநாட்டு மீனவர்கள் நமது நாட்டுக் கடலில் மீன் பிடிக்கும்போது அவர்களுக்குவரி இல்லா டீசலை மத்திய அரசு தருகிறது. ஆனால் நமக்கு மட்டும் வரி விதிக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வரி இல்லாமல் டீசல் வழங்கவேண்டும் என்றார் கோமஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+