கற்பழித்த பெண்ணை மணந்து தண்டனையிலிருந்துதப்பிய சாப்ட்வேர் என்ஜினியர்
சென்னை:
காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணைக் கற்பழித்த வாலிபர் சிறைதண்டனையிலிருந்து தப்புவதற்காக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
சென்னை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மும்தாஜ். இவருக்கு வாய் பேச முடியாது,காதும் கேட்காது. இப்பெண்ணின் வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் அப்துல்லா. 25வயதாகும் அப்துல்லா, சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி மும்தாஜ் அவரது வீட்டில் தனியாகஇருந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்ட அப்துல்லா வீடு புகுந்து மும்தாஜைகற்பழித்தார். இந்த சமயம் பார்த்து மும்தாஜின் சகோதரி அங்கு வந்து விட்டார்.
நடந்து கொண்டிருந்த அக்கிரமத்தைப் பார்த்த அவர் கூச்சல் போட்டு ஊரைக்கூட்டினார்.
அப்துல்லா மீது மும்தாஜின் பெற்றோர் சென்னை பெரியார் நகர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தனர். இதையடுத்து அப்துல்லா மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
கடந்த மே 30ம் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. நீதிபதிமோகன்தாஸ் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அப்துல்லாவுக்கு எதிரானசாட்சியங்கள் வலுவாக இருந்ததால் நிச்சயம் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனைகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக நேற்று அப்துல்லா தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் ஒருமனுவைத் தாக்கல் செய்தார். அதில், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அப்துல்லாவும், மும்தாஜ் குடும்பத்தினரும் பேசி சமரசம் ஆகி விட்டனர்.
இதன் விளைவாக மும்தாஜை அப்துல்லா கல்யாணம் செய்து கொண்டு விட்டார்.எனவே அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி மோகன்தாஸ் அப்துல்லாவை விடுவித்தும், வழக்கைத்தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு பெண்கள் உரிமை அமைப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றுஅவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மும்தாஜுக்கு தலாக் கொடுத்துவிட்டு அப்துல்லா, வேறு பெண்ணை திருமணம்செய்யவும் வாய்ப்பள்ளதால், இந்த வழக்கில் போலீஸார் மேல் முறையீடு செய்துஅப்துல்லாவுக்கு உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று அவர்கள்கோருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications