கணவர் கொலை-மனைவியை சிக்க வைத்த செல்!
சென்னை:
மூணாறில் ஹனிமுனுக்காக சென்றபோது கணவரைக் கொன்ற புது மனைவி குறித்துசினிமாவை மிஞ்சும்வகையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னை பம்மல் சங்கர் நகரை சேர்ந்த அனந்தராமன். இவருக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் சமீபத்தில் திருமணம்நடந்தது. ஸ்ரீவித்யாவுக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை. இவர் அன்பராஜ் என்பரை காதலித்ததால்,இவர் பெற்றோர்கள் இவருக்கு அனந்தராமனை கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
![]() |
| கணவர் அனந்தராமனை கொலை செய்வதற்கு முன் ஏரிக்கு அருகே ஸ்ரீவித்யா எடுத்துக் கொண்ட படம் |
திருமணம் முடிந்து விட்டாலும் ஸ்ரீவித்யாவை காதலன் நினைவு வாட்டியது. காதலனுடன் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார் வித்யா. ஒகு கட்டத்தில், அனந்தராமனை கொன்று விடுவது என்று திட்டம் போட்டுள்ளனர்வித்யாவும் அன்பராஜூம்.
இதை தொடர்ந்து ஸ்ரீவித்யா ஹனிமூன் டூர் புரோகிராம் தயாரித்தார்.
ஹனிமுனை சாக்காக கூறி அனந்தராமனை கேரளாவுக்கு அழைத்துச் செல்வது, அங்கு குருவாயூர் அல்லதுமூணாறில் வைத்து அவரை கொன்று விடுவது என்றும் முடிவு செய்து கடந்த 16ம் தேதி சென்னையில் இருந்துபுறப்பட்டார் வித்யா.
டூர் புறப்படுவதில் தொடங்கி எங்கெங்கு, எந்தெந்த தேதியில் தங்குகிறோம், அனந்தராமனை எப்படி கொல்வது,பின்பு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவது என்பது வரை எல்லா விவரங்களையும்பக்காவாக தயாரித்தார் ஸ்ரீவித்யா. இந்தத் திட்டத்தை தனது காதலனுடன் பகிர்ந்து கொண்டார்.
திட்டம் போட்டு முடித்தவுடன் அதற்கான எல்லா ஏற்படுகளையும் செய்தார். அனைத்தும் ரெடியானதும் கடந்த16ம் தேதி ஸ்ரீவித்யா தனது கணவர் அனந்தராமனை அழைத்துக் கொண்டு ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில்இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் இருவரும் பயணம் செய்தனர்.
![]() |
| மூணாறு எஸ்டேட்டில் கணவருடன் |
வித்யாவின் யோசனைப்படி அதே ரயிலில் மற்றொரு பெட்டியில் காதலன் அன்பராஜ் மற்றும் அவரது நண்பர்ஆனந்தும் பயணித்தனர்.
அதிகாலை 5 மணிக்கு ரயில் திருச்சூரை சென்றடைந்தது. அங்கிருந்த கணவன், மனைவி இருவரும் கார் எடுத்துகுருவாயூர் சென்றார் அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
பின்பு இருவரும் குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பின்னர் மீண்டும் தனது அறைக்கு வந்தனர்.பின்னர் அறையை காலி செய்துவிட்டு அங்கிருந்து கார் மூலம் மூணாறு சென்றனர்.
மூணாறில் உள்ள சுற்றுலா தலத்தில் அறை எடுத்து தங்கினர். அன்பராஜூம், ஆனந்தும் பஸ் மூலம் மூணாறுவந்தனர். பின்பு ஆட்டோ பிடித்து சுற்றுலா தலத்திற்கு செல்லுமாறு கூறினர்.
வழியில் ஆட்டோ டிரைவர் அன்பழகனின் செல்போனில் இருந்து அன்பராஜ் ஸ்ரீவித்யாவின் செல்போன் மூலம்தொடர்பு கொண்டார். அப்போது இருவரும் எஸ்எம்எஸ் மூலம் பேசினர். அப்போது குண்டல ஏரிக்கு வந்துவிடுமாறு ஸ்ரீவித்யா கூறினார்.
![]() |
| கொலைக்கு முன் ஜாலியாய் ஒரு படகு சவாரி. ஸ்ரீவித்யாவுடன் அப்பாவி அனந்தராமன் |
இதை தொடர்ந்து ஆட்டோ மூலம் குண்டல ஏரிக்கு செல்ல முடிவு செய்தனர். அனால் ஆட்டோவில் போதியபெட்ரோல் இல்லாததால் அந்த திட்டம் மாறிப்போனது.
பின்னர் ஸ்ரீவித்யா தாங்கி இருந்த லாட்ஜ்க்கு பக்கத்து லாட்ஜில் அறை எடுத்து இருவரும் தாங்கினர். மேலும்ஆட்டோ டிரைவரிடம் நாளை குண்டல ஏரிக்கு செல்ல வேண்டும் என்றும் அதற்காக லாட்ஜூக்குவந்துவிடுமாறும் ஆட்டோ டிரைவர் அன்பழகனிடம் கூறி அனுப்பினர்.
அதன்படி ஆட்டோ டிரைவரும் மறுநாள் காலை ஆட்டோவுடன் லாட்ஜூக்கு வந்தார். பின்பு அன்பராஜூம்,ஆனந்தும் குண்டல ஏரிக்கு புறப்பட்டனர். அப்போது எஸ்எம்எஸ் மூலம் ஸ்ரீவித்யாவை தொடர்பு கொண்டனர்.
அப்போது ஸ்ரீவித்யா தான் குண்டல ஏரியில் இருப்பதாக பதில் அனுப்பினர். இதைதொடர்ந்து அன்பராஜூம்,ஆனந்தும் குண்டல ஏரி அருகில் சென்றபின் ஆட்டோ டிரைவரிடம் அங்கேயே நிற்குமாறு கூறி விட்டு ஏரிக்குசென்றனர்.
பின்னர் 1 மணி நேரம் கழித்து அன்பராஜூம், ஆனந்தும் பதட்டத்துடன் திரும்பி ஆட்டோவில் ஏறிக்கொண்டனர். பின்பு அங்கிருந்த அவசர அவசரமாக மூணாறு திரும்பிய அவர்கள் அங்கு லாட்ஜில் தங்கிக்கொண்டனர்.
![]() |
| போலீஸ் பிடியில் ஸ்ரீவித்யா.. கைரேகை பதிவின்போது |
இதனிடையே அன்பழகனுக்கு அவரது நண்பர் விஜி என்பவர் போன் செய்து குண்டல ஏரி பகுதியில் ஒருவர்கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் கூறினர். இதனால் அன்பழகனுக்கு தனது ஆட்டோவில் வந்த ஆனந்த்மற்றும் அன்பராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அவர் தன்னிடம் இருந்த செல்போனில் இருந்த எஸ்எம்எஸ் தகவலைப் பார்த்தார். அதை படித்துபார்த்தும் கொலையை செய்தது இவர்கள் இருவரும் தான் என்று சந்தேகப்பட்டார்.
இதை தொடர்ந்து தனது ராணுவ நண்பனை வரவழைத்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவரும், அவரதுநண்பரும் அன்பராஜ் மற்றும் ஆனந்த் இருந்த லாட்ஜூக்கு வந்தனர்.
பின்பு அவர்கள் தங்கியிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டி. போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகுபோலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்பு குண்டல ஏரியில் அனந்தராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகுஸ்ரீவித்யாவிடம் விசாரணை நடத்தினர்கள்.
அப்போது தனது கணவர் ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்றதாகவும், அங்கு 2 பேர் அவரை அடித்து கொன்றுவிட்டு தன்னிடம் இருந்த தங்கமலையை பறித்துக் சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் இருவரும் மலையாளத்தில் பேசியதாகவும், முகத்தை மூடி இருந்தாகவும் மாற்றி மாற்றிக் கூறினார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஸ்ரீவித்யாவை மிரட்டி விசாரித்தனர். வேறு வழியில்லாமல் உண்மையைஒப்புக்கொண்டார்.
வித்யா கூறிய தகவல்களை அன்பராஜூம், ஆனந்தும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூணாறு போலீசார்ஸ்ரீவித்யா, ஆனந்த் மற்றும் அன்பராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்த விசாரணைக்கு ஆட்டோ டிரைவர் பெருமளவில் உதவியதால் அவரை போலீசார் பாராட்டினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!
















Click it and Unblock the Notifications