சென்னையில் ரூ. 100 கோடியில் சுகாதார பள்ளி
டெல்லி:
சென்னை அருகே தாம்பரத்தில் ரூ. 100 கோடி செலவில் சர்வதேச தரத்துடன் கூடியமருத்துவப் பள்ளி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் டெல்லி சென்றுஅன்புமணியை சந்தித்துப் பேசினார். தமிழக சுகாதாரத் துறை தொடர்பான திட்டங்கள்,தேவைகள் குறித்து அப்போது அன்புமணியுடன் ராமச்சந்திரன் ஆலோசனை நத்தினார்.இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போதுஅன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் நிலுவையில் உள்ள சுகாதாரத் திட்டங்கள், பொது சுகாதாரத் திட்டங்கள்,அவசர சிகிச்சை மையங்கள், புற்றுநோய், மன நோய், தாய் சேய் நலம், எய்ட்ஸ்திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்திற்கு கூடுதலாக ரூ. 50 கோடிஒதுக்கப்படும். கடந்த ஆண்டு எய்ட்ஸ், எச்.ஐ.வி. ஒழிப்புத் திட்டத்துக்கு ரூ. 45 கோடிதரப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கனவே ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுகூடுதலாக ரூ. 15 கோடி வழங்கப்படும்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஓரிரு நாளில்அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு 100 மாணவர் இடங்களுடன்இக்கல்லூரி செயல்படும். அதேபோல தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கும் நிரந்தரஅங்கீகாரம் வழங்கப்படும்.
சேலம் அரசு மருத்துவமனையை ரூ. 120 கோடி செலவில் அகில இந்திய மருத்துவவிஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதலாக 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த உதவ வேண்டும் என்றும் தமிழகஅரசு கோரியுள்ளது. அதுகுறித்தும் பரிசீலிக்கப்படும்.
தமிழகத்தில் ரூ. 4,000 கோடி மதிப்பில் மருத்துவமனைகள் மேம்படுத்துதல், புதியமருத்துவமனைகள் அமைத்தல் போன்ற பணிகளில் தமிழக அரசு ஈடுபடவுள்ளது.இதற்காக உலக வங்கியின் ஒப்புதலைப் பெற்றுத் தருமாறு என்னிடம் கோரியுள்ளனர்.நிச்சயம் இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு நான் உதவுவேன்.
சென்னை அருகே தாம்பரத்தில் ரூ. 100 கோடி முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்தபொது சுகாதாரப் பள்ளி அமைக்கப்படும். இதற்காக 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தரதமிழக அரசு உறுதியளித்துள்ளது.
கடந்த ஓராண்டாகவே இதுகுறித்து அப்போதைய ஜெயலலிதா அரசிடம் கோரிக்கைவிடுத்து வந்தோம். ஆனால் பதிலே வரவில்லை.
இதேபோன்ற மருத்துவப் பள்ளி டெல்லியிலும் அமைக்கப்படும்.
சுகாதார நிர்வாகம், கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அமைக்கப்படும்.மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பொது சுகாதாரம் தொடர்பான அடிப்படைஅம்சங்கள் குறித்து இக்கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும்.
மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் என்றும்தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. மதுரைமருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்காக ரூ. 3 கோடி கூடுதலாகஒதுக்கப்படும் என்றார் அன்புமணி.
இந்த சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ஹோடா, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications