அதிமுகவை ஆதரித்த ரஜினி மன்றத்தினர் நீக்கம்
கோவை:
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவை ஆதரித்த ரஜினி மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் மீது அகில இந்திய ரஜினி மன்றத் தலைவர் சத்யநாராயணா இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார்.இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக நீக்கப்பட்டவர்கள் தெரித்துள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியை கண்டித்து ரஜினி ரசிகர்கள் பரபரப்புநோட்டீசு ஒட்டியிருந்தனர். சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக ரஜினி தெரிவிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல தமிழகம் முழுவதுமே ரஜினி ரசிகர்களில் ஒருபிரிவினர் பாமக இடம் பெற்ற திமுக கூட்டணிக்கு எதிராகவும் அதிமுகவுக்கு ஆதரவாகவும் களமிறங்கினர்.
ஆனால், தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டார் ரஜினி. மேலும் தனதுபெயரையோ மன்றத்தின் பெயரையோ பயன்படுத்தி யாரும் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என்றும்எச்சரித்திருந்தார்.
இதை அதிமுக ஆதரவு ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அவர்கள்அதிமுகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
இது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந் நிலையில் இப்போது அவர்கள் மீது மன்றத் தலைமைநடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்த கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 13 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மன்றத்தில் இருந்து நீக்கியதற்கான கடிதமும் அனுப்ப்பட்டு உள்ளது.
அதில், சட்டசபை தேர்தலில் நாம் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க கூடாது என்று தலைவர் ரஜினிஅறிவித்திருந்த நிலையில் நீங்கள் ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தல் பணியாற்றி உள்ளீர்கள். இதனால் நீங்கள்மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளீர்கள்.. இப்படிக்கு அகில இந்தியரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சத்யநாராயணா என்று கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ரஜினி மன்ற துணை செயலாளர் அபு, கோவை மேற்கு பகுதி பெறுப்பாளர் முபாரக், மாவட்டபிரதிநிதி செளந்தர பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
தங்களது நீக்கம் குறித்து மன்றத்தின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறுகையில்,
சத்திநாராயணாவின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர போகிறோம். நீக்கப்பட்ட ரசிகர்களை ரஜினிகாந்த உடனேசந்திக்க வேண்டும். இல்லையென்றால், விரைவில் வெளிவர உள்ள சிவாஜி படத்தை புறக்கணிப்போம்.
மேலும் ராகவேந்திரா திருமண மண்டபம் முன்பு உண்ணாவிரத போராட்டமும் நடத்துவோம். விரைவில் எங்கள்எதிர்ப்பை தெரிவிக்கும் போஸ்டார்களை ஒட்டுவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications