ரீட்டா-விபச்சாரத்தில் தள்ளிய பெண்களுக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

Reeta mary

ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்கு தொடர்பாக ஜெயில் வார்டன்கள் 4 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனைவிதித்த திண்டிவனம் நீதிமன்றம், ரீட்டாவை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்களுக்கும் சிறை தண்டனைவிதித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஓபிஆர் பார்க் அருகில் விபசாரத்தில் ஈடுபட்டதாக சென்னைதிருவொற்றியூரை சேர்ந்த ரீட்டா மேரியை 2001ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

பின்பு ரீட்டா மேரி செஞ்சியில் உள்ள மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு ஜெயில்வார்டன்கள் லாசர், ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சிறை ஊழியர் சேகர் ஆகியோர் ரீட்டா மேரியை சிறையில்வைத்தே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

Santhi

இது குறித்து ரீட்டா மேரியின் தாய் லீலாவதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயில்வார்டன் லாசர் மற்றும் ஜெயபால், அன்பழகன், ராமசாமி, சேகர் ஆகியாைரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக திண்டிவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பேராசிரியர் கல்யாணி,வழக்கறிஞர்கள் லூசி, லூர்து சேவியர் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி தினகரன் ரீட்ா மேரி கற்பழிப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Kavitha

சிபிசிஐடி நடத்திய விசாரணையில், சேலம் ஆத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ், முருகேசன், ஆனந்தன், ஈஸ்வரி,சாந்தி, கவிதா ஆகியோர் ரீட்டா மேரியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், கவிதா தான் ரீட்டாவை முதலில்விபசாரத்தில் வலுக்கட்டாயமாகத் தள்ளியதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதிதயாளன் தீர்ப்பளித்தார்.

Easwari

அதில், ரீட்டா மேரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயில் வார்டன்கள் லாசர்,ஜெயபால், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதே போல ரீட்டாவை விபச்சாரத்தில் தள்ளிய ஆனந்தராஜ், ஆனந்தன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஈஸ்வரி, சாந்தி ஆகியோருக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கவிதாவுக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என்றுதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4 வருடமாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்ததால், இவர்கள்விரைவில் விடுதலை ஆகி விடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+