For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருத்தாச்சலத்திற்கு நிதி ஒதுக்க வைத்த கேப்டன்

By Staff
Google Oneindia Tamil News

விருத்தாச்சலம்:

விருத்தாச்சலம் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று ரூ. 25 லட்சம்மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதிஅளித்துள்ளதாக தொகுதி எம்.எல்.ஏ.வும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.

விருத்தாச்சலம் தொகுதிக்கு வந்த விஜயகாந்த்தை பொதுமக்கள் சந்தித்து பல்வேறுகோரிக்கைகள் அடங்கிய மனுக்களை விஜயகாந்த்திடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், எனது தொகுதியில்நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்டகலெக்டரிடம் முறைப்படி கோரிக்கை வைத்தேன்.

அந்தக் கோரிக்கையை ஏற்று விருத்தாச்சலம் நகர வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 25லட்சம் நிதியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஒதுக்கியுள்ளார்.

மணிமுத்தாறு பாலத்தை பொருத்தவரை தறபோது கூடுதலாக ரூ. 15 லட்சம் நிதிஒதுக்கீடு செய்வதாக ஆட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம்கட்டுமானப் பணிகள் முடிந்து விடும் என்றும் கூறியுள்ளார்.

குடிநீர், மின்சார வசதி, சாலை வசதிக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படவுள்ளேன்.இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி, விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்ஆகியோரை விரைவில் சந்தித்து தொகுதி மேம்பாட்டுக்குத் தேவையானநிதியுதவிகளைப் பெறுவேன்.

என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்குரியவர்களுக்கு உரியஇழப்பீடு வழங்குவதில் பெரும் தாமதம் நிலவுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக திமுக எம்.பிக்கள் டெல்லியில் உள்ளனர். ஆனால் இந்தப்பிரச்சினை குறித்து அவர்கள் எதுவுமே பேசவில்லை என்று தெரிகிறது. ஆனால் அதுஏன் என்றுதான் புரியவில்லை.

தேர்தல் நேரத்தில் நான் விருத்தாச்சலம் தொகுதியில் தங்குவேன் என்றுஉறுதியளித்திருந்தேன். ஆனால் சட்டசபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும்,அமைச்சர்கள், அதிகாரிகளைப் பார்ப்பதற்கும் சென்னையில் இருப்பதுதான்செளகரியம்.

ஆனால் நான் இங்கு தங்காததை சில அரசியல் கட்சிகள் தேவையற்ற விமர்சனம்செய்து வருகின்றன. நான் எங்கு இருந்தாலும் விருத்தாச்சலம் எனது தொகுதிதான்.எனது தொகுதியின் நலத் திட்டங்களுக்கு தேவையானவற்றை நான் செய்துகொண்டுதான் இருப்பேன்.

நான் என்ன செய்வேன், செய்யப் போகிறேன் என்பது எனது தொகுதி மக்களுக்குத்தெரியும். எனது பொறியியல் கல்லூரியை விற்று விட்டதாக சிலர் வதந்திபரப்புகிறார்கள். அது உண்மை இல்லை.

அதற்கான அவசியம் எனக்கில்லை என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X