மேரியின் மாமியார் உடல் தோண்டி எடுப்பு
கிருஷ்ணகிரி:
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக கொலை செய்யப்பட்ட சென்னைவழக்கறிஞர் அருள் நாதனின் தாயார் சவுரியம்மாளின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறுகளை தடயவியல் பரிசோதனைக்காக போலீஸார் சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
![]() |
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நாதனை அவரது மனைவியும்,அவரது கள்ளக்காதலரும் சேர்ந்து படுகொலை செய்தனர்.
தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக அருள்நாதனை, காதலன்ஆரோக்கியதாஸுடன் சேர்ந்து கொலை செய்ததாக அருள்நாதனின் மனைவி மேரிசேவியர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் இதே காரணத்திற்காக அருள்நாதனின் தாயார் சவுரியம்மாளையும் இருவரும்சேர்ந்து அடித்துக் கொன்றதாகவும் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சவுரியம்மாளின் பிணத்தைத் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யபோலீஸார் முடிவு செய்தனர். அருள்நாதனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம்பூசாரிப்பட்டி ஆகும்.
அங்குதான் கடந்த மாதம் இறந்த சவுரியம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.சவுரியம்மாளின் உடலைத் தோண்டு எடுத்துப் பரிசோதனை செய்வதற்காக மாதவரம்இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீஸர் படை பூசாரிப்பட்டிக்குவிரைந்தது.
ரத்தினப்பா நகரில் சவுரியம்மாள் புதைக்கப்பட்ட இடம் கிருஷ்ணகிரி தாசில்தார்சென்ன கேசவபாபு முன்னிலையில் தோண்டப்பட்டது. பிணம் மிகவும் அழுகியநிலையில் இருந்ததால் அங்கேயே பிரேதப் பரிசோதனை நடத்த முடிவுசெய்யப்பட்டது.
அரசு மருத்துவர் ராமநாதன் அந்த இடத்திலேயே பரிசோதனை நடத்தினார். பின்னர்சவுரியம்மாளின் கழுத்து, கை ஆகிய பகுதிகளிலிருந்து சாம்பிள் எடுக்கப்பட்டுபாலிதீன் பையில் அடைக்கப்பட்டு சென்னைக்கு தடயவியல் பரிசோதனைக்குஅனுப்ப எடுக்கப்பட்டது.
பின்னர் போலீஸ் படை அங்கிருந்து சென்றது.சவுரியம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகேதான்அருள்நாதனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கொலைகளும்குறித்து பூசாரிப்பட்டி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கொலைகாரி மேரியின் தாயார் பாத்திமாக கண்ணீருடன் தனது மகளின் செய்கைகுறித்துக் கூறுகையில், எனது தம்பிதான் அருள்நாதன். அவனுக்கும், மேரிக்கும்1994ம் ஆண்டு கல்யாணம் நடந்தது.
கல்யாணத்திற்குப் பின்னர் சென்னைக்குப் போய் விட்டனர். கடந்த மே மாதம்எங்களது ஊரில் நடந்த தேவலாய தேர்த் திருவிழாவுக்கு குடும்பத்துடன்வந்திருந்தனர்.
அப்போது மேரி யாரிடம் சரியாகப் பேசவில்லை. பின்னர் அவர்கள் சென்னைக்குத்திரும்பினர். சில நாட்களிலேயே எனது தாயார் சவுரியம்மாள் இறந்து விட்டதாகதகவல் வந்தது.
உடல் ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது, கூட மேரியும் வந்திருந்தாள். இப்போதுஅவளது புருஷனும் இறந்து விட்டார்.
எனது தாயையும் அவள்தான் கொன்றதாக கூறுகிறார்கள். இதை என்னால் நம்பவேமுடியவில்லை.
யாரோ சொல்லிக் கொடுத்துத்தான் அவள் இப்படி செய்திருக்க வேண்டும். அவளதுமனதை யாரோ மாற்றி விட்டார்கள். அதனால்தான் இந்த படுபாதக செயலை அவளசெய்திருக்கிறாள் என்றார் பாத்திமா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications