கள்ளகாதலனுடன் மகள் ஓட்டம்-தந்தை தற்கொலை
சென்னை:
கள்ளக் காதலனுடன் மகள் ஓடிப் போனதால் அவமானமடைந்த தந்தை, எருக்கம் பால் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மோகன் (35). கருங்கல் ஜல்லிவியாபாரி. இவரது மனைவி தமிழரசி என்ற கலைவாணி (32), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இதே பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. திருமணமான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கருப்பசாமி வேலைபார்த்த பிளாஸ்டிக் கம்பெனியில் கலைவாணியும் வேலை பார்த்து வந்தார்.
அப்போது இவர்களுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்ததால், இருவீட்டாரும் அவர்களை கண்டித்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கருப்பசாமியும், கலைவாணியும் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் கலைவாணியின் தந்தை பண்டாரம் மனமுடைந்தார். திருமணமான தனது மகள்வேறொருவருடன் ஓடி விட்டதால் மிகுந்த அவமானம் அடைந்த அவர் எருக்கம் பாலை சாப்பிட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஊரை விட்டு ஓடிய கள்ளக் காதலர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காதலன் மனைவியை தாக்கிய பெண்:
இதற்கிடையே, தனது கள்ளக் காதலனின் மனைவியைத் தாக்கியதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவள்ளூரைச் சேர்ந்தவர் கலையரசன் (31). இவரது மனைவி மங்காத்தாள் (26). கலையரசனுக்கும்,அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி தாராவுக்கும் (30) கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
இதையறிந்த வெங்கடேசன் தாராவை கண்டித்துள்ளார். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கள்ளக் காதலனுடன்உறவை தாரா தொடர்ந்தார். இந் நிலையில் கலையரசின் மனைவி மங்காத்தாள், தாராவிடம் சென்று நியாயம்கேட்டார்.
அப்போது மங்காத்தாளை, தாரா உருட்டுக்கட்டையால் தாக்கினார்.
இதில் காயமடைந்த மங்காத்தாள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பானபுகாரில் பேரில் மணவாளநகர் போலீசார் தாராவை கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications