மாமியாரை கொன்றது எப்படி?: மேரி வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற தனது மேரி, தனது மாமியாரைக் கொலை செய்தது எப்படிஎன்பது குறித்து போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Mary
அதன் விவரம்:

எனக்கும் தாசுக்கும் இடையிலான கள்ளத் தொடர்பை என் மாமியார் சவுரியம்மாள் பார்த்துவிட்டார்.இதையடுத்து அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.

இந் நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல என் கணவர் திட்டமிட்டார். என் மாமியார் வீட்டிலேயே இருப்பதாகசொல்லிவிட்டார். இதுதான் சரியான தருணம் என்று நினைத்த நான், தாசிடம் நாங்கள் ஊட்டிக்குச் சென்றவுடன்மாமியாரைக் கொன்றுவிடு என்று கூறினேன்.

ஆனால், நீ இல்லாத நேரத்தில் கொலை நடந்தால் சந்தேகம் வந்துவிடும், நீயும் இருந்தால் தான் சரியாக இருக்கும்என்றார் தாஸ்.

இதையடுத்து ஊட்டி டூர் திட்டத்தை தள்ளிப் போட வைத்தேன். மாமியாரை குளிக்கும்போது கொன்றுவிட்டுபாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்ததாக கதை கட்ட நினைத்தோம்.

சம்பவத்தன்று என் மாமியார் குளித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரை இரும்புக் கம்பியால் தாஸ்தாக்கினார். ஆனால், அதை மாமியார் தடுத்துவிட்டார். இதையடுத்து அவரை தலையில் தாக்கினார். இதில்மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட விழுந்தார்.

அவர் செத்த பின் பக்கத்துக்கு வீட்டினரைக் கூப்பிடலாம், இப்போது கூப்பிட வேண்டாம் என்று காத்திருந்தோம்.ஆனால், சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஓடி வந்துவிட்டனர். இதையடுத்து அடிக்க பயன்படுத்தியகம்பியை மறைத்து வைத்துவிட்டு, மாமியார் தவறி விழுந்து மண்டை உடைந்துவிட்டதாக கதை விட்டோம்.

Doss
பின்னர் அவரை மருத்துமனைக்குக் கொண்டு செல்வது போல சிறிது நேரம் கால தாமதம் செய்தோம். அவர்இறந்துவிட்டதாக உறுதியான பின்னரே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

அங்கே அவர் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் மேரி கூறியுள்ளார்.

இந் நிலையில் கிருஷ்ணகிரியில் புதைக்கப்பட்ட சவுரியம்மாளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அதன் மண்டைஓடு தடயவியல் நிபுணர்கள் சோதனைக்காக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மேரியின் கணவரான அருள்நாதனின் சித்தப்பா சில மாதங்களுக்கு முன்மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிலும் தாசுக்கும் மேரிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம்எழுந்துள்ளதால் அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே தாசுக்கு மேரி தவிர வேறு சில பெண்களிடமும் தொடர்பு இருந்த விவரமும் வெளியேவந்துள்ளது.

சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் திருமணமாகி 2 குழந்தைகளுக்குத் தாயான பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாஸ், பின்னர் வேறொரு பெண்ணுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார்.

ஆனால், சில காலத்துக்குப் பின் அவர் மட்டுமே திரும்பி வந்தாராம். அந்தப் பெண் கதை என்னவானது என்றுதெரியவில்லை. இது தொடர்பாக தாசிடம் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+