பொதுத் துறையை புறக்கணிக்கிறோமா?-ப.சி
சென்னை:
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை-மதுரை இடையிலான பெட்ரோலிய குழாய் இணைப்புத் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசியசிதம்பரம்,பொதுத் துறை நிறுவனங்கள் நோய்வாய்ப்பட்டு விடாமல் தடுக்க அவ்வப்போது சில கசப்பு மருந்துகளைத் தரவேண்டியது அவசியமாகிறது. அதைத் தான் மத்திய அரசு செய்து வருகிறது. மற்றபடி மத்தியில் ஆளும் காங்கிரஸ்கூட்டணி அரசு இந்த நிறுவனங்களை புறக்கணிப்பதாக சொல்வது தவறு.
உலக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது. மிகப் பெரிய சுமை ஏற்பட்டிருந்தாலும் அதை மக்கள் மீது திணிக்காமல் குறைந்தபட்சவிலை உயர்வையே அறிவித்துள்ளார் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா.
சர்வதேச சந்தையில் 2003-04ல் ஒரு பாரல் கச்சா எண்ணெய் 23 டாலராக இருந்தது. இன்று அதன் விலை 69டாலர். இரண்டு ஆண்டுகளில் விலை 3 மடங்கு உயர்ந்துவிட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனம் நமது நவரத்தின நிறுவனங்களில் ஒன்று. அது நஷ்டத்தில் மூழ்கிவிடாமல் தடுக்கபெட்ரோலிய விலை உயர்வு அவசியமாகிவிட்டது.
பொதுத் துறை நிறுவனங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. இந்த நிறுவனங்களுக்கு இரு ஆண்டுகளில் ரூ.19,696 கோடியை ஒதுக்கியுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications