சென்னை டூ நெல்லை: 16 மணி நேர பாவ பயணம்!
சென்னை:
டீசல் விலை குறையும் வரை அரசுப் பேருந்தில் சென்னையிலிருந்து நெல்லைக்குபோவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் 16 மணி நேரம் பரிதாபகரமானமுறையில் இருக்கையில் அமர்ந்து அவஸ்தைப்பட நேரிடும்.
டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் மக்களுக்கு மட்டும் இல்லாமல்மாநில அரசுகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைஉயர்த்தினால்தான் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியும் என்ற நிலை.ஆனால் இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளதாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகஇருந்த அதிமுக ஆட்சி பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்து விட்டதாலும்,இப்போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தினால் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால்திமுக அரசு தயக்கம் காட்டுகிறது.
ஆனால் அதேசமயம், டீசல் சேமிப்பில் தனி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.இதன் ஒரு கட்டமாக நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் வழக்கமாக செல்லும்வேகத்தை விட குறைந்த வேகத்தில் செல்ல கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக சென்னையிலிருந்து தென்கோடியில் உள்ள திருநெல்வேலிக்கு வழக்கமாக13 மணி நேர பேருந்துப் பயணத்திற்குப் பிறகு சென்றடையலாம்.
ஆனால் தற்போது இது 16 முதல் 18 மணி நேரமாக நீண்டுவிட்டது. இது சாதாரணபேருந்தில் அல்ல, அதிவிரைவு சொகுசுப் பேருந்தில்தான் இந்த நிலைமை.
டீசல் சிக்கனம் என்ற பெயரில் விரைவுப் பேருந்தைகளை நத்தைகளாக மாற்றிவிட்டது அரசு. இதனால் அத்தனை நீண்ட தூரப் பேருந்துகளும் ஆமை போலமெதுவாக ஊர்ந்து கொண்டுள்ளன.
முன்பு மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போதுமணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்கின்றன.
ஓட்டுனர்கள் நினைத்தால் வேகமாகவே ஓட்டலாமே, அரசுக்கு எப்படித் தெரியப்போகிறது என்று சிலர் நினைக்கலாம். இந்த மாதிரியான சிக்கல் வந்து விடக் கூடாதுஎன்பதற்காக பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு சாதனைங்களைபொருத்தியுள்ளனராம்.
எனவே ஓட்டுனர் ஆக்ஸிலேட்டர் மீது ஏறி நின்றாலும் கூட இந்த வேகத்துக்கு மேல்போக முடியாது.
நெல்லைக்கு 16 மணி நேரம், திருச்சிக்கு 9 மணி நேரம், மதுரைக்கு 12 மணி நேரம்என மக்கள் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்தை அடைய முடியாத நிலை உள்ளது.
அரசுப் பேருந்துகள் இவ்வாறு நத்தை போல நகர்வதால் பலர் ரயில் பயணத்தை நாடஆரம்பித்துள்ளனர். இதனால் வழக்கமாக கூட்டம் இல்லாத பல ரயில்களில் இப்போதுபயணிகள் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதாம்.
டீசலை சிக்கனப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி மக்களை வருத்தலாமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications