2 கோடி அன்பளிப்பு: ஜெ மீது அடுத்த வாரம் சிபிஐ குற்றப் பத்திரிக்கை
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது வெளிநாட்டிலிருந்துபரிசாக வந்த ரூ. 2 கோடி பணம் குறித்த வழக்கில் அடுத்த வாரம் சிபிஐ குற்றச்சாட்டுப்பதிவு செய்யும் என்று தெரிகிறது.
முதல் முறையாக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரது பிறந்த நாளுக்குப்பரிசாக வெளிநாட்டிலிருந்து ரூ. 2 கோடிக்கு காசோலைகள் வந்தன. இவை குறித்துவருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ஜெயலலிதா குறிப்பிடவில்லை,மறைத்துவிட்டார்.இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது திமுக மீண்டும்ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்த வழக்கு தூசி தட்டப்பட்டுள்ளது.
எம்எல்ஏவாக உள்ள ஜெயலிலதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும், மேல்விசாரணை நடத்தவும் அனுமதி தருமாறு கோரி தமிழக சட்டசபை சபாநாயகர்ஆவுடையப்பனின் அனுமதியைக் கோரி சிபிஐ கடிதம் அனுப்பியது.
இந்தக் கடிதம் தனது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்தவாரத்திற்குள் சபாநாயகரின் அனுமதி கிடைத்தும் விடும் என்றுஎதிர்பார்க்கப்படுவதால், அடுத்த வாரத்தில் ஜெயலலிதா மீது சிபிஐ நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐக்கு பதில் தருவதற்கு முன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின்ஆலோசனையை ஆவுடையப்பன் பெறுவார் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications