சுனாமி நிதி: ஜெ. புகாருக்கு கருணாநிதி மறுப்பு
சென்னை :
சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தர வந்த நிதியைப் பெற ஜெயலலிதாஅரசு முயற்சிக்கவும் இல்லை, ஏற்கவும் முன் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதிகுற்றம் சாட்டியுள்ளார்.
சுனாமி நிவாரண நிதி தொடர்பாக முதல்வருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேஅறிக்கை போர் நடந்து வருகிறது.முதலில் நிதியை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று கருணாநிதி குற்றம்சாட்டினார். அதை மறுத்த ஜெயலலிதா, 806 கோடி மட்டும்தான் மத்திய அரசுகொடுத்தது என்றார்.
இதற்கு தற்போது கருணாநிதி பதில் அளித்தார். இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ராஜீவ் காந்தி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ. 2347.19 கோடி நிதியைஒதுக்கியது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சிநிறுவனம் ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் ரூ. 2,549.88 கோடிஅனுமதிக்கப்பட்டது.
ஆக மொத்தம் மத்திய அரசு சொந்த நிதி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின்உதவி பெற்று தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டது மொத்தம் 4,897.07 கோடி.
மத்திய அரசு தருவதாக அறிவித்த நிதியில் ரூ. 820.31 கோடி இதுவரைவிடுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் சுனாமி மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.207.5 கோடி முன் பணமாக தரப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ. 1027.81 கோடி ஒதுக்கியதில், தமிழக அரசு இதுவரை ரூ. 806கோடியைத்தான் செலவு செய்துள்ளது. மத்திய அரசு, உலக வங்கி விடுவித்ததொகையை விட அதிமுக அரசு கூடுதல் செலவு செய்யவில்லை.
நிவாரணப் பணிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு அரசாணைகள் வழங்கி,செலவு செய்து, அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மத்திய அரசின்ஒதுக்கீட்டில் இருந்து நிதியைப் பெற வேண்டியது மாநில அரசின் கடமை.
அதை செய்யாமல் விட்டு விட்டு மத்திய அரசை நான் தூண்டி விட்டுத் தடுத்துவிட்டதாகவும், மத்திய அரசு மாற்றாந்தாய் மனநிலையோடு நடந்து கொண்டதாகவும்ஜெயலலிதா கூறியிருப்பது இட்டுக் கட்டிய பொய்யாகும்.
பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் அரசு சார்பில் வீடு கட்டவோ,தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து முடிக்கவோ அக்கறை காட்டாதஜெயலலிதா அரசு, சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து ரூ. 1,136 கோடி செலவுசெய்ததாக சொல்வது மக்களை ஏமாற்றும் மோசடி வேலையாகும்.
சுனாமி நிவாரணத்துக்கென மாவட்ட ஆட்சியர்களின் சிறப்புக் கூட்டம்நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நாங்கள அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தினோம் என்கிறார் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications